குட்கா பூமியாகிறதா? சென்னையில் குட்கா விற்பனை மேலும் அதிகரிப்பு 50 கிலோ குட்கா ரூபாய் 35 ஆயிரம் பறிமுதல்

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ.1- ராயப்பேட்டை காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள ஒரு பீடா கடையில் குட்கா சோதனை நடத்தினர்.

அப்போது கடையில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த முகமது மார்கூப் (23), அவரது தம்பி முகமது மசூம் (18) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களது கடையில் இருந்து 27 கிலோ எடையுள்ள சிக்னேச்சர் மற்றும் ஜர்தா குட்கா பாக்கெட்டுகள், ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், முகமது மார்கூப் மீது ஏற்கெனவே குட்கா விற்பனை தொடர்பாக 3 வழக்குகளும், முகமது மசூம் மீது ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. பின்னர், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல், துரைப்பாக்கம் காவல்துறையினர் திருவள்ளுவர் நகர் முதல் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை நடத்தினர். அங்கு குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக அமுதவள்ளி (43) என்ற பெண்ணை கைது செய் தனர்.

அவரது கடையில் இருந்து 23.6 கிலோ எடையுள்ள ஹான்ஸ், ஸ்வாகத், விமல், வி1 உள்ளிட்ட பல்வேறு வகையான குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அமுத வள்ளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரு சோதனைகளிலும் மொத்தம் 50.6 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு, தாய்லாந்து சுற்றுலா சென்று விட்டு வந்த சென்னையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தே கம் ஏற்பட்டது. அவரது சூட்கேஸில் இருந்த 10 பார்சல்களை பிரித்து பார்த்த போது, ரூ.1.50 கோடி மதிப்புள்ள 1.50 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ் சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இளை ஞரை கைது செய்தனர். அதேபோல, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த பெண் பயணியிடம் இருந்து ரூ.1.71 கோடி மதிப்புள்ள 1.71 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *