அக்கம் பக்கம் அக்கப்போரு இந்த உலகம் உங்களுக்கு முன்னாடியே இருந்துச்சு ப்ரோ! – குப்பைக் கோழியார்

“இந்த உலகம் 454 கோடி ஆண்டுகளாகச் சுற்றி வருகிறது. அதில் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித மூதாதையர் இனங்கள் தோன்றத் தொடங்கின. 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நமது ஹோமோ சேப்பியன்ஸ் இனம் ஆப்பிரிக்காவில் தோன்றிவிட்டது. இந்தியாவில் 1950 முதலே அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. 1952 முதல் தேர்தல் நடைபெற்றது. 1968-இல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. மார்க்கோனி 1896-லேயே ரேடியோவைக் கண்டுபிடித்துவிட்டார். (அய்யய்யோ.. ரேடியோன்னா என்னான்னு கேட்பாங்களே)  சரி, சார்லஸ் பாபேஜ் முதல் கால்குலேட்டர 1922-லயும், முதல் கம்ப்யூட்டரை 1834லயும் கண்டுபிடிச்சிட்டாரு… லூமியே சகோதரர்கள் 1896லயே சினிமாவை எடுத்து திரையிட்டுட்டாங்க!” இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போல!

புதிதாகப் பிறந்த குழந்தை எல்லாவற்றையும் தானே கண்டதாக ஒரு மாயை தோன்றும். அது மாதிரி, எல்லா அய்டியாவும் எங்களுக்குத் தான் வந்துச்சாக்கும் என்று புதுசா சிந்திக்கிற எல்லாருக்கும் தோணும். இதுக்கு “Illusion of Originality”ன்னு பேரு. அறிவு வளர வளர அது சரியாயிடும் – சரியாயிடDம். ஆனால், இந்த ஈராயிரக் குழவிகளுக்கு இந்த உலகமே அவங்க பொறந்ததுல இருந்து தான் சுத்துதுன்னு இந்தக் காலத்திலயும் இருக்கிற நெனைப்பைப் பார்த்தா என்னத்த சொல்றது?

எதுக்கெடுத்தாலும் “பிளாஸ்டு பிளாட்டு”, “கதறு கதறு”, “ஃபயரு ஃபயரு”ன்னே சுத்திக்கிட்டிருக்கிற இந்தக் குரூப்புக்கு எதைச் சொல்லி விளங்க வைக்கிறது?

கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மய்யம் சார்பில் அறிவிப்பு வருது. அதுக்கு புது முதலமைச்சர் படத்தைப் போட்டு வைப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? அது கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே தொடங்கி நடந்துக்கிட்டு வருது!

தாம்பரம் மாநகர காவல்துறை, இரவு ரோந்துக்கான பட்டியலைப் போட்டு, யார் யார் எந்தெந்த பகுதி, என்ன தொலைப்பேசி எண்ணுன்னு இணையதளத்தில் பதிவு செஞ்சா, “பார்த்தியா எங்க அண்ணன் ஆட்சியில் ஒரே நாள்ல மாறுனதை”ன்னு ஷேர் பண்றீங்க.. அது கடந்த பல ஆண்டுகளா நடந்துக்கிட்டு வர்ற வழக்கம்.

தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர்ன்னு இப்போது பொறுப்பேற்ற அமைச்சர் கீர்த்தனா படத்தைப் போட்டு ஃபயர் விடுறாங்க!

அப்போ லூர்தம்மாள் சைமன் யாரு? சத்தியவாணி முத்து யாரு? அவ்வளவு வேணாம்… செல்வி ஜெயலலிதா யாருப்பா? முதல் அமைச்சராவே இருந்தவங்களை விட்டுட்டு, தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர்னு ரீல்ஸ் போட்டா என்னப்பா அர்த்தம்?

கொஸ்டீன் பேப்பர் ரிலீஸ் ஆயிடுச்சுன்னு இந்தியா முழுக்க நீட்டை ரத்து பண்ணா அதுக்கும் உங்க தலைவர் படத்தைப் போட்டு பிளாஸ்டு போடுறீங்களே! நியாமாரே!

இந்த உலகம் உங்களுக்கு முன்னாடியே இருந்துச்சு! நம்புங்க ப்ரோ! கண்ணைத் திறந்துபாருங்க ப்ரோ! உங்களுக்கு முன்னாடி நல்லாவே இருந்துச்சு ப்ரோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *