ஊராட்சித் தேர்தலை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ.1 தமிழ்நாட்டில் ஊராட்சிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவற்றை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஊராட்சிகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தி முடிக்க கால வரம்பு நிர்ணயித்து தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பாஸ்கரன் என்ற வழக்குரைஞர் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்வாக காரணத்தைக் கூறி அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உத்தரவாதத்தை, அரசு மீற முடியுமா எனவும் தனது மனுவில் கேள்வி எழுப்பியுள்ள அவர், இது தொடர்பாக, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 243-E பிரிவின்படி ஊராட்சிகளின் பதவிக் காலம் அய்ந்து ஆண்டுகள் என்றும், அடுத்த ஊராட்சியை அமைப்பதற்கான தேர்தல் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கு மாறாக சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வார்டு மறுவரையறை, இடஒதுக்கீட்டுப் பணிகளை முடித்து, நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் ஊராட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *