101 வயது திராவிட இயக்க வீரர் ‘மிசா’ சோ.மா.ராமச்சந்திரன் மறைந்தாரே!

1 Min Read
- Advertisement -

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், 101 வயதிலும் கொள்கை உறுதி மிக்கவராகத் திகழ்ந்த ‘மிசா’ தீரர்,
சோ.மா.ராமச்சந்திரன் அவர்கள் காலமானார்  (30.10.2026) என்ற செய்தி அறிந்து பெரிதும் வருத்தமடைகிறோம்.

தீவிரமான திராவிட இயக்கப் பற்றாளர். அண்மையில் ‘மிசா’ குறித்த ஆவணப்பட வெளியீட்டு விழாவில் அவரைச் சந்தித்த போது, பழைய நினைவுகள் தந்த உணர்வுகளால் உந்தப்பட்டு நம்மைக் கண்டு கண்கலங்கி, நம் கைகளைப் பற்றிக் கொண்டார். பல செய்திகளை அந்த ஆவணப்படத்தில் தனது பேட்டியில் அவர் பதிவு செய்திருக்கிறார். இடர்கள் வந்தபோதும், இயக்கத்தின் தளகர்த்தர்களாக நின்றவர்களுள் தோழர்
சோ.மா. அவர்களும் ஒருவர்.

எளிய களப்பணியாளரான சோ.மா. அவர்கள், கலைஞர் அவர்களின் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் “கலைஞர் விருது” வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.

அவரது மறைவால் துயருறும் குருதிக் குடும்பத்தினர், திராவிட இயக்கக் கொள்கைக் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

  திராவிடர் கழகம்

சென்னை       
30.10.2026     

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *