டிஜிட்டல் கைது என்றவுடன் கைப்பேசியைத் தூக்கிப் போடுவதை விட்டுவிட்டு பயந்து நடுங்குவதா? இதுதான் படித்தவர்களுக்கு அழகா?

- Advertisement -

உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி காட்டம்!

 

புதுடில்லி, அக்.31 முன்னாள் நீதிபதி ஒருவரை சிபிஅய் மற்றும் ஆர்பிஅய் அதிகாரி என்று கூறி 15 நாட்களாக டிஜிட்டல் அரஸ்ட் செய்து ரூ 3 கோடிவரை மோசடி செய்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ‘‘படித்த வர்களே அதிகம் டிஜிட்டல் மோசடிக்கு இலக்காகிறார்கள்.

டிஜிட்டல் மோசடி என்று ஒன்றுமே இல்லை என்று தெரிந்தும் இவ்வாறு மோசடியாளர்களிடம் சிக்கிவிடுகின்றனர். அப்படி ஏதாவது மோசடி அழைப்பு வந்தால் கைப்பேசியைத் தூக்கிவீசி விடுங்கள்’’  என்று நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ‘டிஜிட்டல் கைது’,  சைபர் மோசடிகள் குறித்தும், அவற்றில் படித்த மக்களே சிக்கி ஏமாறுவது குறித்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கவலையும் வேதனையும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற விசாரணையின் போது இதுகுறித்துத் கருத்துத் தெரிவித்த தலைமை நீதிபதி சூரியகாந்த்

“மக்கள் ஏன் இந்த மோசடிகளை இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பது தான் நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது, அவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லையா? இதைப் பற்றிய செய்திகள் ஊடகங்கள் எங்கும் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன.

ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்ந்துகொண்டு, கைப்பேசி வாயிலாகத் தன்னை ஒருவர் கைது செய்துவிட்டார் என நினைப்பதற்கு எப்படி முடிகிறது? அந்த கைப்பேசியை சுவரில் எறிந்தால் கைது முடிந்துவிடப் போகிறது!

சுற்றியுள்ள சூழல் விழிப்புணர்வுடன் இருந்தும், படித்தவர்களே இப்படி ஏமாறுவதைப் பார்க்கும்போது விரக்தியாக இருக்கிறது. இந்த வயதில் நீங்களே டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள் என்றால், அடுத்த தலைமுறைக்கு என்ன வழிகாட்டப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் இந்த டிஜிட்டல் கைது மோசடிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதே கள நிலவரமாக உள்ளது. குறிப்பாக, தொழில்நுட்ப சிக்கல்களை உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாத முதியவர்களையே சைபர் குற்றவாளிகள் அதிகம் இலக்கு வைக்கின்றனர்.

சட்டத்தையும் நீதியையும் நிர்வகித்த முன்னாள் நீதிபதிகளே இதுபோன்ற அதிநவீன உளவியல் ரீதியான மிரட்டல்களுக்குப் பலியாகும்போது, சாதாரண பொது மக்களுக்கும் முதியவர்களுக்கும் இது குறித்த கூடுதல் விழிப்புணர்வும், காவல்துறை மற்றும் அரசின் உடனடி நடவடிக்கைகளுமே அவசியமாகிறது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *