இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர் நீக்கம் சர்ச்சையில் சிக்கிய மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கிய உத்தரப்பிரதேச அரசு!

- Advertisement -

லக்னோ, அக்.31 உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் தொகுதியில், அனைத்து உரிய ஆவணங் களையும் சமர்ப்பித்த போதிலும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமி யர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலில் இந்த 13,000 பேரின் பெயர்களும் இடம் பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காக, வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) ‘படிவம் 7’-அய் நிரப்பிக் கொடுக் குமாறு இரண்டு சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டுகள் உத்தரவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம் மற்றும் போராட்டங்களை அடுத்து, இந்த இரு அதிகாரிகள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டது.

மோசடி வழக்கில்  குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ள நிலையிலும், குற்றச்சாட்டிற்கு ஆளான அவ்விரு அதிகாரிகளுக்கும் உத்தரப் பிரதேச அரசு தற்போது பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டிற்கு ஆளான மயங்க் கோஸ்வாமி   மாநில சில்லறை விற்பனை கண்காணிப்புக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றொருவராக ஹேமந்த் சவுத்ரி: பேரிடர் மேலாண்மைத் துறையில் முதன்மை சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தேர்தல் முறைகேடு மற்றும் வாக்காளர் பெயர் நீக்க வழக்கில் சிக்கிய அதிகாரிகளுக்கு அரசு அவசர அவசரமாக பதவி உயர்வு வழங்கியிருப்பது, அம்மாநில அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *