நியூயார்க், அக். 31- கியூபா மீதான அமெரிக்கத் தடைகளை எதிர்த்து அய்.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
கம்யூனிஸ ஆட்சி நடை பெறும் கியூபா நாட்டுக்கும், அதன் அண்டை நாடான அமெரிக்காவுக்கும் 60 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்கு நிலவுகிறது. கியூபா மீது அமெரிக்கா பொருளாதார, வா்த்தக மற்றும் நிதி ரீதியில் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இந்தத் தடைகளால் கியூபாவில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் எரிபொருள் கள் தட்டுப்பாடு, மின் சாரத் தடைகள், வறுமை ஆகியவை நிலவுகின்றன.
இந்தத் தடைகளை முடிவுக்கு கொண்டு வரக் கோரி, அய்.நா. பொதுச் சபையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பினா்களை கொண்ட அந்த சபையில் 130 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதில் இந்தியாவும் ஒன்றாகும்.
அந்தத் தீா்மானத்துக்கு எதிராக 17 நாடுகள் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதை யடுத்து, அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தீா்மானத் தின் மீது விவாதம் நடை பெற்றது. அதில் அய்.நா.வுக்கான இந்திய தூதரக பிரதிநிதி சவும்யா நாயா் பேசியபோது, கியூபா மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், பிற நாடுகளைப் பாதிக்கும் வகையில் தடைகளை விதிக்க வகை செய்யும் சட்டங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.
