பையூர் ம. தமிழ்ச்செல்வி மறைவிற்கு மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் மற்றும் கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

- Advertisement -

பையூர், அக். 31- தருமபுரி – கிருட்டினகிரி ஒருங்கிணைந்த  மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளரும், கிருட்டினகிரி மாவட்ட மேனாள் தலைவருமான  பையூர் பெ.மதிமணியனின் வாழ்விணையர் ம.தமிழ்ச்செல்வி  27/10/2026 அன்று இரவு 7.50 மணியவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக  மாநில துணைப்பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் ஆகியோர் ம.தமிழ்ச் செல்வியின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

இரங்கல் கூட்டம்

கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலை மையில் 28/10/2026- மதியம் 1.00 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இரங்கல் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ. செய ராமன், மாவட்ட தலைவர்கள்  ஓசூர் சு.வனவேந்தன், அரூர் அ.தமிழ்ச் செல்வன், தர்மபுரி பீம.தமிழ் பிரபாகரன், மதிமுக தலைமை அரசியல் ஆலோசனைக் குழு வி.கே.இளங்கோ, கிருட்டினகிரி மாவட்ட செயலாளர் செ.பொன்முடி, துணைத் தலைவர் வஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் தருமபுரி க.கதிர், ஓசூர் அ.செ.செல்வம், மேனாள் மாவட்டத் தலைவர் த.அறிவரசன், மேனாள் செயலாளர் கா.மாணிக்கம், ஓசூர் மாநகர தலைவர் து. இரமேசு, பையூர் ஊர் பெரியவர் பன்னீர்செல்வம், திமுக பேச்சாளர் இளையராஜா, ஒன்றிய திமுக அவைத் தலைவர் இளங்கோவன், வனத்துறை திருப்பத்தூர் வி.டி.சேட்டு ஆகியோர் இரங்கல் தெரிவித்துப் பேசினர்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் வீ.அன்புராஜ், முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் மேனாள் மாவட்டத் தலைவர் பெ.மதிமணியனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலைத் தெரிவித்தனர்.

இறுதி நிகழ்வில் பகுத்தறி வாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட துணைத் தலைவர் தி.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் இல. ஆறுமுகம், கி.முருகேசன், மாவட்ட தொழிலளரணி நிர்வாகி செ.ப.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராஜேசன், துணைத் தலைவர் வெ.புகழேந்தி, துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், துணைத் தலைவர்கள் அ.வெங் கடாசலம், மு.வேடியப்பன், மாவட்ட ப.க. செயலாளர் க.வெங்கடேசன், கிருட்டினகிரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ.நாராயண மூர்த்தி, காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், தி.அன்புச்செழியன், பொற்கொடி, சங்கீதா, மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன், கிருட்டினகிரி நகரத் தலைவர் கோ.தங்கராசர், நகர செயலாளர் அ.கோ.இராசா, புலியாண்டூர் சி.இராசா, பையூர் சி.இராசா, வி.சரவணன், தமிழரசன், சிவ. பெருமாள், சி.லோகேஷ், இராமாபுரம் மு.இரஞ்சித், மு.புகழேந்தி,ஊற்றங்கரை சித.அருள், சித.வீரமணி, ஓசூர் மாவட்டச் செயலாளர் சின்னசாமி, தருமபுரி மேனாள் மண்டல செயலாளர் கரு.பாலன், மாவட்ட ப.க.தலைவர் கதிர்.செந்தில், தருமபுரி மேனாள் மாவட்டத் தலைவர்கள் இ.மாதன், சரவணன்,காமலாபுரம் மு.சிசுபாலன், இரா.சின்னசாமி, இராமசாமி, பழனி, மாணிக்கம், முத்து, பெரியண்ணன், பெங்களூரு இரா. இராசா, காமலாபுரம் கிளைக் கழகத் தோழர்கள் மற்றும் தருமபுரி, அரூர், ஓசூர் கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்களும், தோழர்களும் அனைத்து கட்சியின் நிர்வாகிகள், ஊர் பொதுமக்களும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்

அன்னாரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தொடக்கம் முதல் இறுதிவரையில் எவ்வித  மூட சடங்குகளும் இன்றி 28/10/2026- மாலை 3.00 மணியளவில்  பையூர் அடுத்த கோனார் கொட்டாய் அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *