கருநாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள மூத்த பகுத்தறிவாளரான பி.கே.அரிபிரசாத் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை உணர்வுடன் கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சே.குணவேந்தன், செயலாளர் இரா.முல்லைக்கோ சந்தித்து பயனாடை அணிவித்து, தந்தை பெரியார் குறித்த ஆங்கில நூல்களை வழங்கி மகிழ்வை தெரிவித்தனர். உடன் தி.மு.க. மேனாள் அமைப்பாளர் ந.இராமசி, துணை அமைப்பாளர் முருகானந்தம், கருநாடக பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்துமணிநன்னன் உடனிருந்தனர். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் கொண்டு வந்து அறிஞர் அண்ணாவால் சட்டமாக்கப்பட்ட “சுயமரியாதைத் திருமணச் சட்டத்தினை” போன்று கருநாடக மாநிலத்திலும் சட்டம் கொண்டு வருமாறு கேட்டு வரைவு கடிதம் வழங்கப்பட்டது (1.7.2026, பெங்களூரு)
பெங்களூருவில் காங்கிரஸ் தலைவருடன் கழகத்தினர் சந்திப்பு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
