சென்னை, அக். 31- சென்னையில் அமைந்துள்ள 12 ஆவின் பாலகங்களை நடத்த விருப்பம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. tn.gov.in என்ற தளத்தில் இருந்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ‘பொது மேலாளர் (விற்பனை), எண்.3A, ஆவின் இல்லம், பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை – 600035’ என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவ.16ஆம் தேதி. கூடுதல் விவரங்களை அறிய 044-2346 4500 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
ஆவின் பாலகங்களை நடத்த நவம்பர் 16 க்குள் விண்ணப்பிக்கலாம்!
Leave a Comment
