பிரேசில் நாட்டுத் தேர்தலில் பொது உடைமை சோசலிசக் கட்சியின் வெற்றியும், செர்பியா தேர்தலில் மாணவர் இயக்கத்தின் வெற்றியும், அந்நாடுகளின் அரசுகளுக்கு ஆதர வான ஊடகங்கள் பற்றிய விவாதமும் சூடு பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கான கோரிக்கை
இந்தியாவில் கடந்த 15 ஆண்டு களாக பெரும்பான்மை ஊடகங்கள் முழுக்க முழுக்க ஆளும் பாஜக ஆதரவு ஊடகங்களாக மாறிவிட்டன.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் மற்றும் தொலைக்காட்சி நெறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாஜக செய்தித் தொடர்பாளரை விட நெறியாளர் பாஜகவிற்குச் சாதகமாக அதிகம் பேசுவார். பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
செர்பியாவிலும் கடந்த 12 ஆண்டுகளாக முன்னணி ஊடகங்கள் தற்போது இங்குள்ள பாஜக ஆதரவு ஊடகங்கள் போல் இருந்தன. அங்குள்ள மக்களிடம் இந்த ஊடகங்கள் பற்றிய கோபம் அவ்வளவு அதிகமாக இருந்தது.
12 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அதிபர் அலெக்சாண்டர் வுச்சிச் தேர்தலில் தோற்றவுடன் மக்கள் தொலைக்காட்சிச் சேனல்களின் அலுவலகங்களுக்குள் நுழைந்தனர். அரசு சேனல் தனது அடிமைத்தனமான நடத்தைக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டது.
குறிப்பாக இந்தியாவில் தூர்தர்ஷன் போல் செயல்படும் செர்பிய அரசுத் தொலைக்காட்சி 27.10.2026 அன்று பகல் முழுவதும் தன்னுடைய பணியை ஒத்திவைத்து விட்டு ஒரு செய்தியை மட்டும் ஒளி – ஒலிப் பரப்பிக் கொண்டே இருந்தது. அது என்ன?
“உங்களிடம் பாரபட்சம் காட்டினோம், ஒருதலைப்பட்சமான செய்திகளைப் பரப்பினோம்” என அதில் இருந்தது. மேலும் முக்கியமான ஊடகநெறியாளர் அத்தொலைக் காட்சியில் தோன்றி “அரசுக்கு ஆதரவாக நாங்கள் அளவிற்கு அதிகமாகச் செயல்பட்டுவிட்டோம், மன்னித்துவிடுங்கள்” என்று அது செர்பியா அரசுச் சேனலில் பேசியது உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது.

பிரான்சில் பள்ளிகளின் நிலை மோசமாக இருப்பதற்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கியுள்ளனர். ஆனால் இந்திய ஊடகங்கள் வன்முறை காட்சிப் பதிவுகளை அதிகமாகக் காட்டி, கோடிக்கணக்கான மக்களின் வாக்குகளைப் பறித்துள்ள, எஸ்.அய்.ஆர்.இன் பலவிதமான மோசடிகளுக்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சி மற்றும் மாணவர் இயக்கங்களின் மீது மக்களிடம் பயத்தை உருவாக்க முயன்றனர். ஆனால் நிலைமை மாறிவிட்டது. மாணவர் அமைப்பின் போராட்டத்தால் கால் நூற்றாண்டு அளவுக்கு மிகவும் பலமாக இருந்த ஆட்சிகள் காணாமல் போகின்றன. அவற்றின் ஊடகங்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கின்றன.
இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராட்டம் நடைபெறும்போது பிரான்ஸ் கலவரத்தைக் காட்டி இங்குள்ள ஊடகங்கள் மக்களைப் பயமுறுத்துகின்றன. செர்பியா, பிரேசில் இரு நாடுகளிலும் ஆளும் முந்தைய அரசுகளின் கட்டுப்பாட்டில் சமூக ஊடகங்கள் மற்றும் பெரிய செய்தி நிறுவனங்கள் இருந்த போதிலும் மக்கள் தங்களின் ஜனநாயக உரிமையை மீட்டனர்.
பிரேசிலில் ஒரு வேட்பாளருக்கு 50% வாக்குகள் கிடைக்கும் வரை வாக்கெடுப்பு நடைபெறும். அந்த முதல் கட்டத்திற்குப் பிறகு இரண்டாவது கட்டத்தில் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே வாக்கெடுப்பு நடைபெறும். முதல் கட்டத்தில் லூலா பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சொனாரோவின் மகன் பிளேவியோ போல்சொனாரோவிடம் 22 லட்சம் வாக்குகளில் பின்னடைவில் இருந்தார். ஆனால் 20 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது கட்ட வாக்கெடுப்பில் 44 லட்சத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
அக்டோபர் 4 தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தப் பிறகு லூலா தனது முழு கவனத்தையும் சமூக ஊடகத்தின் மீது திருப்பினார். பிரேசிலில் வலதுசாரி சிந்தனைக்கு சமூக ஊடகத்தில் ஆதிக்கம் உள்ளது. இந்த முறை லூலா அந்த இடத்தை எப்படிக் கைப்பற்றினார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் (வாட்ஸ் அப்) ஒரு சேனல் உருவாக்கப்பட்டது.
லூலா ஒருபோதும் கைப்பேசி வைத்திருக்க மாட்டார். ஆனால் வாட்ஸ்அப் இயக்கு வதற்காக முதல் முறையாக அய்போன் வாங்கினார்.
லூலா பிரேசிலில் நான்கு முறை அதிபர் தேர்தலில் வென்றுள்ளார். முதல் கட்டத்தில் பின்னடைவைச் சந்தித்தும் இறுதி கட்டத்தில் வென்றார். பிரேசில் வரலாற்றில் இதுபோன்றது இதுவரை நடந்ததில்லை. அவரது வெற்றி உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து போல்சொனாரோவின் தந்தையை ஆதரித்தார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சமூக ஊடகங்கள் திட்டமிட்டு லூலாவின் பதிவுகள் மக்களிடையே செல்வதை பல்வேறு வழிகளில் தடுத்தன. லூலாவின் வெற்றி டிரம்பின் ஒருதலைப்பட்ச ஆதிக்கத்திற்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.
“அமெரிக்காவின் கைப்பாவை அரசாங்கம் வேண்டாம், உண்மையான ஜனநாயகம் வேண்டும்” என்று வெனிசுலாவிலும் மக்கள் தெருக்களில் இறங்கத் தொடங்கியுள்ளனர். எங்கெல்லாம் சர்வாதிகாரிகளின் கைப்பிடியில் அதிகாரம் உள்ளதோ, அங்கெல்லாம் மக்களின் போராட்டம் காரணமாக ஜனநாயகம் வெளியே வரத் தொடங்கியுள்ளது.

டிரம்ப் செர்பியாவின் அதிபர் வுச்சிச்சை ஆதரித்தார் – அவர் தோற்றார். பிரேசிலில் போல்சொனாரோவின் மகனை ஆதரித்தார் – அவரும் தோற்றார். அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஹங்கேரிக்குச் சென்று ஓர்பானை ஆதரித்தார் – அவரும் தோற்றார். டிரம்ப் தன்னைத் தீவிர வலதுசாரித் தலைவர்களின் தலைவராக நிலைநிறுத்த விரும்பினார். ஆனால், ஹங்கேரி, பிரேசில் மற்றும் செர்பியா நாட்டுத் தேர்தல் முடிவுகள் அவருக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துவிட்டன.
ஹங்கேரியில் ஓர்பான் ஆதரவாளர்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் குழப்பமான வாக்களர் பட்டியல்களை உருவக்கினர். எதிர்க்கட்சிக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காதபடி முட்டுக் கட்டைகள் இருந்தும் கடந்த ஏப்ரல் தேர்தலில் மக்கள், மாணவர் ஆதரவு அணிக்கு வாக்களித்து ஓர்பானைத் தோற்கடித்தனர்.
தன்னை எப்போதும் அதிகாரத்தில் வைத்திருக்க ஓர்பான் இந்தியாவைப் போன்றே அங்கும் ஊடகத்தினரைக் கைக்குள் போட்டுக்கொண்டார். அரசியலமைப்புச் சட்டத்தில் பல மாற்றங்கள் செய்தார். உச்சநீதிமன்றத்தையும் தனது கைப்பாவையாக மாற்றினார்.
ஓர்பான் வென்றிருந்தால் ஹங்கேரியின் அரசியலமைப்புச் சட்டம் உயிர் பிழைத்திருக்காது. பிரேசிலிலும் முதல் கட்டத்தில் லூலாவை விட முன்னிலைப் பெற்ற பிறகு பிளேவியோ போல்சொனாரோ ஆபத்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது “பிரேசிலின் ஜனநாயகத்தை உயிர்ப்பிக்க இதன் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம்” என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியது.
இவர் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற விரும்புகிறார் என்று, தீவிர வலதுசாரிகளாகக் கருதப்படுபவர்களில் சிலரும் கூட லூலாவுக்கு வாக்களித்தனர். நடுநிலையாளர்களும் லூலா பக்கம் சென்றனர். ஏனெனில், இந்த மனிதன் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார் என்று பயந்தனர். வளர்ச்சி சற்று மெதுவாக இருந்தாலும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற விடமாட்டோம் என்றனர். பல பகுதிகளில் போல்சொனாரோவின் வேட்பாளர்கள் லூலாவின் வேட்பாளர்களைத் தோற்கடித்துள்ளனர்.
2018இல் போல்சொனாரோ வென்றபோது வாட்ஸ் அப்-இன் பங்கு வேறுவிதமாக விவாதிக்கப்பட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் மக்களின் மனதை திசைதிருப்பவும், போலிச் செய்திகளைப் பரப்பவும் எவ்வாறு ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்குப் பிரேசில் தேர்தல் ஒரு முக்கிய உதாரணமாகும். அதே நேரத்தில், அதே தளங்களைக் கொண்டு எதிர்க்கட்சிகள் எப்படி தந்திரமாகச் செயல்பட்டு வெற்றியை ஈட்டின என்பதையும் இது காட்டுகிறது.
பிரேசில் தேர்தலில் போலிச் செய்திகளின் தாக்கம்
பிரேசில் அதிபராக இருந்த போல்சோனாரோ, போலிச் செய்திகளைப் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினார். பிரேசில் தொழிலதிபர்கள் பணம் கொடுத்து மொத்தமாகச் செய்திகளைப் பரவச் செய்தனர் என்பதற்கு நீதிமன்றத்தில் சாட்சிகள் உள்ளன. மேலும், லூலாவின் பின்னடைவால் வருந்திய இடதுசாரித் தலைவர் ஆண்ட்ரே ஜானோனஸ், “உண்மை, வெளிப்படைத்தன்மை உள்ளவர்கள் போலிச் செய்திகளைப் பரப்ப வேண்டிய அவசியமில்லை” என்பதை உணர்ந்து மக்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில், வாட்ஸ்அப் நிறுவனமும் மெட்டாவின் கட்டளைப்படி லூலாவின் பதிவுகளைக் கட்டுப்படுத்த முயன்றது. இருப்பினும், ஆண்ட்ரே ஜானோனஸ் தனது குழுவினரை அழைத்து, வாட்ஸ்அப் சேனலின் பெயரை “லூலா ஆர்மி” என்று மாற்றினார்.
டிஜிட்டல் வியூகம் மற்றும் மக்கள் இயக்கம்
ஆண்ட்ரே ஜானோனஸின் வியூகங்கள் பிரேசில் அரசியலில் திருப்புமுனையாக அமைந்தன:
வேகமான வளர்ச்சி: தொடக்கத்தில் 60 ஆயிரமாக இருந்த பின்தொடர்பவர்கள், ஒரு நாளுக்குள் 1 லட்சமாகவும், 3 நாட்களில் 34 லட்சமாகவும், 20 நாட்களில் 1 கோடியை எட்டியும் சாதனை படைத்தனர்.
மஞ்சள் சட்டைப் புரட்சி: வலதுசாரிகளின் அடையாளமாக இருந்த பிரேசில் கால்பந்து அணியின் மஞ்சள் சட்டையை அல்காரிதம் ஊக்குவித்ததால், லூலாவின் ஆதரவாளர்களும் அந்தச் சட்டையை அணியத் தொடங்கினர். இது இளைஞர்களிடையே பிரச்சாரத்தை வைரலாக்கியது.
எதிரிகளின் தந்திரத்தை முறியடித்தல்: எதிரியின் பதிவுகளை லைக் செய்யவோ, பார்வர்ட் செய்யவோ, கமெண்ட் செய்யவோ கூடாது என்றும், அவர்களுடன் மோதுவதை நிறுத்திவிட்டு பிளாக் செய்துவிட்டு சொந்தமாகப் பதிவிட வேண்டும் என்றும் லூலா தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
இதனை எதிர்த்துப் ப்ளாவியோ போல்சோனாரோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், விசாரணையில் வாட்ஸ்அப் பிரச்சாரத்தில் எந்த ஒரு தகவல் பிழையும், போலிச் செய்தியும் இல்லை என்பது உறுதியானதால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏழைத் தொழிலாளியின் எழுச்சியும் எதிரிகளின் அவமதிப்பும்
அதிபர் லூலா தனது ஆரம்ப காலத்தில் ஒரு மர அறவை நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாகப் பணிபுரிந்தவர். அப்போது நடந்த விபத்தில் அவரது விரல் வெட்டுப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட போல்சோனாரோ இதனை வைத்து லூலாவைக் கேலி செய்தார்.
ஒரு ஏழைத் தொழிலாளியாக இருந்து தன் உழைப்பால் அதிபராக உயர்ந்தவரை ஏளனம் செய்ததைக் கண்டு பிரேசில் மக்கள் வெகுண்டெழுந்தனர். மக்களின் எதிர்ப்பைக் கண்டு வேறு வழியின்றி போல்சோனாரோ மன்னிப்புக் கேட்க நேர்ந்தது.
இந்தியாவின் அரசியல் சூழலும் சமூக ஊடகங்களும்
இதே போன்ற டிஜிட்டல் அரசியல் உத்திகள் இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு ஒரு சான்றாக, 2018இல் ராஜஸ்தானின் கோட்டாவில் பாஜக கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அமித் ஷா பேசியதைக் குறிப்பிடலாம். அப்போது அவர், “நான் ஒரு பொய்யைச் சொல்வேன், அதை நமது உறுப்பினர்கள் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பார்கள். இதற்கு அனைத்து சாதனங்களும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.
இதைப் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், “அகிலேஷ் தனது தந்தைக்கு எதிராக நின்று புதுக் கட்சி தொடங்கப் போகிறார் என நான் ஒரு வதந்தியைப் பரப்பினேன். அப்படி எதுவுமே நடக்கவில்லை; ஆனால் நான் பேசி 10 நிமிடங்களுக்குள் அது அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவிவிட்டது. சிறிது நேரத்தில் மேற்குவங்க பாஜக தலைவர் என்னிடம் கைப்பேசியில், “அகிலேஷ் தந்தையை அடித்துவிட்டாராமே” என்று கேட்டார். நான் ராஜஸ்தானில் பரப்பிய வதந்தி அரை மணி நேரத்தில் இந்தியா முழுவதும் பரவிவிட்டது” என்று கூறி சிரித்தார்.
மக்களின் மனதைச் சமூக ஊடகங்களால் எளிதில் ஹேக் செய்ய முடியும், திசைதிருப்ப முடியும். ஆனால், அதே தளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்த்துச் சரி செய்யும் வழியையும் பிரேசில் தேர்தல் மூலம் எதிர்க்கட்சியினர் காட்டியுள்ளனர். இந்தியாவில் தொலைக்காட்சி நிறுவனங்களிலும், வானொலிகளிலும் கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப இலவச ஒளிபரப்பு நேரம் வழங்கப்பட்டாலும், சமூக ஊடகங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
