பக்தி என்ற பெயரில் அரங்கேறும் சில செயல்கள், மனித ஆரோக்கியத்திற்கும் அடிப்படைச் சுகாதாரத்திற்கும் எவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்பதற்குச் சான்றாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் ‘பண்டாரா’ (Bhandara) நிகழ்வில் மக்கள் உணவருந்தும் தட்டுகள் கழுவப்படும் விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மிகவும் அழுக்கான, மஞ்சள் நிறத்தில் கலங்கலாக இருக்கும் ஒரு தொட்டித் தண்ணீருக்குள் பல நபர்கள் நின்றுகொண்டு தட்டுகளைக் கழுவுகிறார்கள்.
சுத்தமான நீர் என்பது அந்த இடத்திலேயே இல்லை என்பது பார்த்தாலே தெரிகிறது.
தண்ணீரின் நிறம் அது எவ்வளவு மாசடைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இந்த அழுக்குத் தண்ணீரில் கழுவப்படும் தட்டுகளில் தான், அங்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
இவ்வளவு அசுத்தமான நீரில் தட்டுகளைக் கழுவும்போது, அதில் கோடிக்கணக்கான கிருமிகள் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. இது வாந்தி, பேதி மற்றும் காலரா போன்ற தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும்.
இதைப் ‘புண்ணியம்’ என்று கருதி எவ்வித மறுப்பும் இன்றி பக்தர்கள் வாங்கிச் சாப்பிடுவது வேதனையான ஒன்று!
பக்தி என்ற பெயரில் அடிப்படைச் சுகாதாரத்தைக் கூட கடைப்பிடிக்காமல் இருப்பது அறிவார்ந்த சமூகத்திற்கு அழகல்ல. நம்பிக்கை என்பது மனத் தூய்மையைக் குறிக்க வேண்டுமே தவிர, அசுத்தத்தை ஆராதிப்பதாக இருக்கக் கூடாது.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இது போன்ற பல ‘பண்டாரா’க்களில் கலந்துகொண்டு சாமியாரின் ஆசீர்வாதம் பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்!
“புண்ணியம் தேடிப் போய்… நோயை விலைக்கு வாங்குவதா?”
Leave a Comment
