தமிழ்நாட்டில் வரலாறு காணாத விலை உயர்வு செப்டம்பர் 2026 தரவுகள் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்!

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 30- “தமிழ்நாட்டில் பொருட் களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன” என்ற குற்றச்சாட்டு உண்மையானதா? இதற்கு ஒன்றிய புள்ளி யியல் அமைச்சகம் மற்றும் முன்னணி நிதி மேலாண்மை நிறு வனங்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள், தற்போதைய பொருளாதாரச் சூழலைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

2025: கட்டுப்பாட்டுக்குள் இருந்த பணவீக்கம்

கடந்த ஆண்டு செப்டம்பர் (2025) மாத நிலவரப்படி, நாட்டின் பணவீக்க விகிதம் மிகவும் குறைந்த அளவில் இருந்தது:

கடந்த 8 ஆண்டுகளுக் கும் மேலான காலத்தில் தேசிய அளவிலான பணவீக்கம் மிகக் குறைந்த அளவை எட்டியது. உணவுப் பொருட்களின் விலைகள் குறையத் தொடங்கியதால், பொருட் களின் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.

தமிழ்நாட்டின் பண வீக்க விகிதம் தேசிய சராசரியை விடக் கணிசமாகக் குறைந்து, விலைகள் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.

2026: அதிர வைக்கும் விலை உயர்வு!

ஆனால், சரியாக ஓராண்டுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறி யுள்ளது. தமிழ்நாட்டில் (6.81%): செப்டம்பர் 2026 நிலவரப்படி, தமிழ்நாட்டின் பணவீக்கம் 6.81% ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியான 5.54%-அய் விட மிகவும் அதிகம்.

இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களுக்கிடையில், செப்டம்பர் 2026-இல் தமிழ்நாடுதான் மிக அதிக விலை உயர்வைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது.

2025-இல்:

பொது மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளும் பொருட்களின் விலை களும் எந்தப் பாதிப்பும் இன்றி முற்றிலும் கட்டுப் பாட்டிலேயே இருந்தன.

2026-இல்:

ஒரே ஆண்டில் நிலைமை மாறி, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மிக வேகமாக உயர்ந்து, பணவீக்கம் கடுமையாக அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

ஒன்றிய புள்ளியியல் அமைச்சகத்தின் இத்தரவுகள், தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் எவ்வளவுக்கு அதிகரித்துள்ளன என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *