பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் சார்ந்த அறிவார்ந்த நிகழ்ச்சி

- Advertisement -

சென்னை, அக். 30- ‘புதுயுகம்’ தொலைக்காட்சியில், வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ‘குறளுக்கும் அமு தென்று பேர் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ் ஆர்வம் உள்ள பள்ளி-கல்லூரி மாணவர்களுக்காக – திருக்குறள் சார்ந்த மாபெரும் அறிவார்ந்த நிகழ்ச்சியாக இது மலரவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியை, சிறீராம் குழுமம் தயாரிக்க, நிஸ் கிரியேட்டிவ்ஸ் சார்பாக ஜி.செல்வா இயக்க, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் இராம்குமார் சிங்காரம் தொகுத்து வழங்கவுள்ளார். 2026 நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஜனவரி 24, 2027 வரை 13 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9:30 மணி முதல் 10 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, தஞ்சாவூர், திருவாரூச், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 12 மய்யங்களில் திறமைமிக்க மாணவர்களைக் கண்டறியும் முதல்கட்டப் பேச்சுப் போட்டியினை நடத்தியது. திருக்குறளை மய்யமாகக் கொண்ட இந்தப் போட்டியில் மொத்தம் 5620 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். பின், இறுதிச் சுற்று, மிகப் பெரியளவில் சென்னையில் நடத்தப்பட்டது.

தமிழ் மொழி ஆர்வத்தையும், பேச்சாற்றலையும் ஒருசேர வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் இன்ஸ்டா கணக்குகளை முடக்கினாலும்
மக்களின் கேள்விகள் மறையாது”

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே

புதுடில்லி, அக். 30- ஒன்றிய அரசு உத்தரவின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்குகளும், பதிவுகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

அதேநேரம், சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதால் மக்களின் கேள்விகள் மறைந்துவிடாது என்றும், இளைஞர் வேலைவாய்ப்பின்மை, ஆட்சி நிர்வாகக் கோளாறுகள் மற்றும் பொது உள் கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தணிக்கை ஒருபோதும் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்துக் கேள்வி எழுப்பும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைக் கட்டுப்படுத்துமாறு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69Aஇன் கீழ் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய கணக்கு முடக்கங்கள் குறித்து செயற்பாட்டாளர்களும் அரசியல் அமைப்பு களும் கடும் கவலை தெரிவித்துள்ளன.

இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வலியுறுத்தி ‘இவிஎம்-அய் அகற்று, தேசத்தைக் காப்பாற்று’ என்ற முழக்கத்துடன் ‘மிஷன் சேவ் கான்ஸ்டிடியூஷன்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் மெஹ்மூத் பிராச்சாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *