அதிக இடங்களில் சோதனை செய்தும் எதுவும் கிடைக்கவில்லை: எதிர்ப்பவர்கள் மாறுவார்களே தவிர, தி.மு.க. என்றைக்கும் நிலைத்திருக்கும்! திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின்பு முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேட்டி!

3 Min Read
- Advertisement -

திருச்சி, அக்.30–  எதிர்ப்பவர்கள் மாறுவார்களே தவிர தி.மு.க என்றைக்கும் நிலைத்திருக்கும்– என்று திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார்.

அவரது பேட்டி வருமாறு:–

இந்த முறையும் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை அதிக இடங்களில் சோதனை செய்துள்ளார்கள்.

என் சகோதரர் மணிவண்ணன் பிஸினஸ் ரீதியாக வைத்துள்ள 2 லேப் டாப்புகளை எடுத்துச் சென்றுள்ளார்கள்.

சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள், தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பித்தது உள்ளிட்டவற்றை திசை திருப்பவே இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம். இது குறித்து எங்கள் கட்சித் தலைவர் கூறியது சரிதான்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மய்யப்படுத்தி தான் இந்த சோதனை என நான் நினைக்கவில்லை.

தொண்டர்கள் வெற்றி பெற வைப்பார்கள்!

நாங்கள் இருந்தால் தி.மு.க. வெற்றி பெறும் இல்லையென்றால் தோல்வி அடையும் என்பது அல்ல. மக்கள் தான் முடிவெடுத்து வெற்றி பெற வைப்பார்கள். எங்கள் கட்சித் தலைவர் கூறுவதை தட்டாமல் செய்வது தான் எங்களுடைய வேலை. நான் மட்டும் தி.மு.க. இல்லை; எங்களிடம் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். நான் இல்லை என்றாலும் எங்களுடைய தொண்டர்கள் பணியாற்றி தி.மு.க.வை தேர்தலில் வெற்றி பெற வைப்பார்கள்.

ஏற்ெகனவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை கைது செய்துள்ளார்கள். இன்று என் வீட்டில் சோதனை செய்ய வந்துள்ளார்கள். திசை திருப்பத்தான் இதை செய்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்தார்கள். அதனைத் தொடர்ந்து அரசுக்கு வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தினார்கள். தி.மு.க. ஆட்சிக்குப் பின்பு தற்போது த.வெ.க ஆட்சியில் வழக்குப் பதிவு செய்து சோதனை செய்கிறார்கள். இது எனக்கு மட்டும்தான். அன்பில் மகேஷ் விவகாரத்தில் புதிதாகத் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. என் வீட்டில் சோதனை செய்தார்கள்.

சோதனை – கைதை எதிர்கொள்வோம்!

சோதனை, கைது உள்ளிட்டவற்றை ஏற்ெகனவே ஜெயலலிதா ஆட்சி காலத் தில் தி.மு.க. எப்படி எதிர்கொண்டதோ அதேபோல இந்த ஆட்சியிலும் எதிர்கொள்வோம். ஜெயலலிதா எல்லா அமைச்சர்கள் மீதும் நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்தார்கள். அதை நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்று வந்துள்ளோம். அதேபோல நீதிமன்றத்தை நாங்கள் நாடுவோம்.

உயர்நீதிமன்றம் இந்த லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்ய நாங்கள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளார்கள். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, வெற்றி – தோல்வி குறித்துக் கவலைப்படுவது இல்லை. தாராபுரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்து இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்திற்கு வந்தோம், அதே போல மதுராந்தகத்திலும் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளோம். ஆளுங்கட்சியின் வெற்றி வித்தியாசம் குறைந்துள்ளது. நாங்கள் தேர்தலை சந்திக்கும் போதே நம்பிக்கையாக சந்திக்கிறோம்.

திரைத்துறையில் இருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்.

தி.மு.க–வை எதிர்த்து களம் கண்ட மாபெரும் தலைவர்களின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. காமராஜர் காலம் தொடங்கி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய விஜய் வரை தி.மு.க–.வை எதிர்த்த முகங்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், தி.மு.க என்றஒற்றை இயக்கம் தமிழ்நாடு அரசியலில் நிலையாகத் தொடர்கிறது.

தி.மு.க. என்றுமே நிலைத்திருக்கும். தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் வேண்டு மானாலும் மாறலாம். ஆனால் தி.மு.க. என்றைக்குமே நிலையாக நிற்கும்.

சோதனையைத் தொடர்ந்து கைது இருக்குமா என்கிற கேள்விக்கு ஊகமாக எந்த பதிலும் கூற முடியாது.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *