புதுடில்லி, அக். 28- உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரம் ஏமாற்றும் நோக்கம் கொண்டது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வலுவாக ஆதரித்துள்ளது. இந்த நடவடிக்கை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது என்றும், இதற்கான உத்தரவுகள் தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் வாதிட்டுள்ளது. மேலும் 248 பக்கங்கள் கொண்ட தனது பதிலில் படிவம் 6 திருத்தப் பட்டதாக கூறப்படும் குற்றச் சாட்டுக்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நாம் எவ்வளவு சிக்கலான வலைகளை பின்னுகிறோம். சிறிது காலம் கழித்து அந்த ஏமாற்று வேலைகள் அனைத்தும் விகாரமான முறையில் வெளிப்பட்டுவிடுகின்றன. படிவம் 6இல் சட்டவிரோதமான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பிரமாணப்பத்திரம் வெளிப்படையான ஏமாற்றும் நோக்கம் கொண்டது. வஞ்சக மானது மற்றும் இருமுகத்தன்மை கொண்டது. இது தேர்தல் ஆணை யத்திற்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது” என்று குறிப் பிட்டுள்ளார்.
