எஸ்அய்ஆருக்குப் பிறகு கருநாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்!

1 Min Read
- Advertisement -

கருநாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) செயல்முறைக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று (27.10.2026) வெளியிடப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் எஸ்அய்ஆர் செயல்முறைகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் நிலையில், கருநாடக மாநிலத்தில் கடந்த ஜூன் 30ஆம் தேதி பணிகள் தொடங் கப்பட்டன.

எஸ்அய்ஆர் பணிகள் தொடங் குவதற்கு முன்னதாக கருநாடக மாநிலத்தில் 5.54 கோடி வாக் காளர்கள் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24 அன்று வெளியிடப் பட்ட வரைவு பட்டியலில் 4.46 கோடி வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். வரைவுப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 4.46 கோடி வாக்காளர் களில் 43.8 லட்சம் பேருக்கு சில விளக்கங்கள் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டது.

மேலும், எஸ்அய்ஆர் செயல் முறையில் விடுபட்டவர்கள், முகவரி மாறியவர்கள், புதிய வாக்காளர்கள் உள்ளிட்டோர் தங்களின் பெயர் களை மீண்டும் சேர்க்க கால அவ காசம் வழங்கப்பட்ட நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 4.55 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் மொத்தம் 99.32 லட்சம் (சுமார் ஒரு கோடி) வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2,25,40,493 ஆண் வாக் காளர்களும், 2,29,12,355 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 2,841 வாக் காளர்களும் உள்ளனர்.

மேலும், இந்தப் பட்டியலில் 18 – 19 வயதுக்கு இடைப்பட்ட 6.83 லட்சத்திற்கும் அதிகமான வாக் காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *