ஆஸ்திரேலியா விசாவுக்குப் புதிய கெடுபிடி

- Advertisement -

கான்பெர்ரா, அக். 28- ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து வரும் இந்தியர்களுக்கு விசா நடைமுறைகளை அந் நாட்டு அரசாங்கம் தற்போது ஒரு மிக முக்கிய மான கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளது. இனி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விசா கூறி விண்ணப்பிக்கும் நபர்கள் இனி கட்டாய மாக தங்களது கை ரேகை மற்றும் முக அடையாளம் மட்டும் பயோமெட்ரிக் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என டில்லியில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்பு அமைப்பை மேலும் பலப்படுத்தும், விசா நடை முறைகளின் உள்ள குளறுபடிகளை தவிர்க்கவும், இந்தியாவு டன் சேர்த்து மொத்தம் 60 நாடுகளை இந்த புதிய பயோமெட்ரிக் விதிமுறைகள் கடந்த அக் டோபர் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்த புதிய நடை முறையின் படி அக். 26- க்கு மேல் புதிதாக விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே. இந்த பயோ மெட்ரிக் தரவுகளை வழங்க வேண்டும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு இந்த விதி முறை பொருந் தாது. இந்த புதிய பயோ மெட்ரிக் சோதனை இரண்டு வழிகளில் சமர்ப்பிக்கலாம். ஒன்று விண்ணப்பதாரர்கள் நேரடியாக ஆஸ்திரேலிய பயோமெட்ரிக் சேகரிப்பு மய்யத்திற்கு நேரில் சென்று தங்களுடைய கை ரேகை மற்றும் முக அடையாளைத்தை பதிவு செய்யலாம். அல்லது ஏற்கனவே தங்கள் பயோமெட்ரிக் தரவுகளை பதிவு செய்து செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருப் பவர்கள் ஆஸ்ட்ரேலியன் இன் என்ற அதிகாரப்பூர்வ செயலி மூலமாகவே, எந்த ஒரு கட்டணமுமின்றி தங்கள் தரவுகளை மிக எளிதாக இணையத்தில் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் இந்த அனைத்து பயோமெட்ரிக் தரவுகள் ஆஸ்திரேலிய மற்றும் உள்ளூர் தகவல் பாதுகாப்புச் சட்டங்களின் படி மிகவும் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.

புதிய நடை முறையால், விசாரணங்களுக்கும் தாமதம் ஆகாது என்றும் பயோமெட்ரிக் தரவுகளை நீங்கள் எவ்வளவு சீக்கிரம் சமர்பிக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் உங்களுடைய விசா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் ஆஸ்தி ரேலியாவுக்கு புதிய விசா விண்ணப்பிப்பவர்கள் ஆஸ்திரேலிய உள்நாட்டு துறை அனுப்பும் மெயில்களையும், வழிமுறைகளையும் சரியாகப் பின்பற்றுவது தங்கள் பயோமெட்ரிக் தரவுகளை உடனுக்குடன் பதிவு செய்வது மிகவும் அவசியமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *