ஜெருசேலம், அக். 28- இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தலில் நேற்று (அக். 27) பிற்பகல் 2 மணி நிலவரப்படி, சுமார் 45 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 1973-க்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.
கடந்த 2023 அக். 7-இல் நடைபெற்ற ஹமாஸ் தாக்குதல் மற்றும் ஈரான், லெபனானுடனான போருக்குப் பிறகு, இஸ்ரேலில் 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு முதன்முறை யாக நேற்று (27.10.2026) தோ்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 12,018 வாக்குச்சாவடிகளில் 73.31 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.
பல வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்டவரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா். பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 44.9 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2022 தோ்தலில் இதே நேரத்தில் 38.9 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
ஜெருசலேமில் உள்ள வாக்குச் சாவடியில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் வாக்களித்தார். அரபு கட்சிகள் ஆட்சியமைப்பதைத் தடுக்க, வலதுசாரி வாக்காளா்கள் அனைவரும் அதிக அளவில் வந்து வாக்களிக்குமாறு அவா் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே, வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடப்பதாக சில கட்சிகள் புகார் எழுப்பின. ஆனால், திட்டமிட்ட முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என மத்திய தோ்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இத்தோ்தலின் அதிகாரபூா்வ முடிவுகள் நவ. 4-ஆம் தேதி அறி விக்கப்படவுள்ளன. இருப்பினும், புதன்கிழமையன்றே வெற்றி-தோல்வி குறித்த தோராயமான நிலவரம் தெரிந்துவிடும்.
இஸ்ரேலில் வாக்காளா்கள் பிரதமரை நேரடியாகத் தோ்ந் தெடுக்காமல் கட்சிகளுக்கே வாக் களிக்கின்றனா். அந்தவகையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான் மையைக் (61 இடங்கள்) கைப்பற்ற, தற்போதைய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி அய்சன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் இழுபறி நீடிக்கிறது.
பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையின்கீழ் பாதுகாப்புத் தோல்விகள், நீதித் துறை சீா்திருத்தங்கள், கட்டாய ராணுவ சேவை தொடா்பாக சமூகங்களுக்கிடையேயான பிளவு, பொருளாதாரம் உள் ளிட்டவை இத்தோ்தலில் முக்கியப் பிரச்னைகளாக உரு வெடுத்துள்ளன.
வரலாற்று ரீதியாக 1973 யோம் கிப்பூா் போருக்குப் பிறகு ஏற்பட்ட ராணுவத் தோல்விகள் இஸ்ரேல் அரசியலில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய சூழலும் தோ்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
