மீண்டும் தாய்நாடு திரும்பினார் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்

- Advertisement -

வெனிசுலா, அக். 27 வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் மரியா கொரினா மச்சோடோ. ஜனநாயகத்தை மீட்கப் போராடியதாக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த விருதை மச்சோடா நேரில் சென்று பெறவில்லை. அவரின் மகள்தான் பெற்றுக் கொண்டார். பின்னர் இந்த விருதை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மச்சோடா வழங்கினார்.

தற்போது ஓராண்டுக்கு பின்னர் மச் சோடா மீண்டும் தமது தாய்நாடான வெனிசுலாவுக்கு திரும்பி உள்ளார். இந்த விவரத்தை அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில் வெனிசுலாவில் ஒன்றாக, சுதந்திரத்திற்காக வந்திருப்பதாக குறிப்பிட்டு, தனது காரை சூழ்ந்து கொண்டு மக்கள் வெனிசுலா கொடிகளை அசைத்தபடி பின் தொடர்ந்த வாகன அணிவகுப்பு காட்சிப்பதிவு ஒன்றையும் அதில் இணைத்துள்ளார்.

அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுகள் ஒரு பக்கம் இருந்த சூழலில், மச்சோடா எங்கே இருக்கிறார் என்று தமக்கு தெரியாது என்று அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். அவர் எனக்கு நோபல் பரிசு வழங்கினார். அவர் பாதுகாப்பாக இருப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *