சேலம் உருக்காலைக்கு கடும் போட்டி ஆந்திராவில் ரூ.16,350 கோடியில் உருவெடுக்கும் புதிய இரும்பு ஆலை! முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்

2 Min Read

அமராவதி, ஜூலை 4 தமிழ்நாட்டின் தொழில் அடை யாளங்களில் ஒன்றான சேலம் உருக்காலைக்கு கடுமையான போட் டியை உருவாக்கும் நோக்கில், ஆந்திர அரசு அண்டை மாநிலத்தில் மாபெரும் இரும்புத் தொழிற்சாலை திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், கடப்பா மாவட்டம், ஜம்மலமுடுகு மண்டலம், சுண்ணாம்பு ராள்ளபல்லி ஆகிய பகுதிகளில் ரூ. 16,350 கோடி முதலீட்டில் இந்த புதிய இரும்புத் தொழிற்சாலை அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு மற்றும் திட்டப் பணிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று (3.7.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அத்துடன், விஜயநகரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ‘ஜிந்தால் தொழில் பூங்கா’வையும் காணொலிக் காட்சி மூலம் அவர் திறந்து வைத்தார்.

பெருமிதம்

நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஆட்சிக்கால அரசியல் மற்றும் ராயலசீமா பகுதி சந்தித்து வந்த வறட்சிப் பிம்பத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார்:

“இந்த இரும்புத் தொழிற்சாலை திட்டத்தின் மூலம் ராயலசீமா பகுதியில் ஒரு புதிய தொழில் புரட்சி அத்தியாயம் தொடங்கியுள்ளது. ராயலசீமா என்பது இனி வறண்ட பூமி அல்ல; அது தண்ணீரின் ஊற்று.”

“கடந்த ஆட்சியில் உயிரற்ற நிலமாக, முடங்கிக் கிடந்த இப் பகுதியை, தற்போதைய அரசு நீர் பாசன திட்டங்கள் மற்றும் தொழில் முதலீடுகள் மூலம் துளிர்க்க வைத்துள்ளது.”

முதலீட்டு மழை

“தற்போது தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், புதிய முதலீடுகள் என ராயலசீமா மாவட் டங்கள் எந்நேரமும் பரபரப்பாக இயங்கும் தொழில் மண்டலமாக மாறியுள்ளன. இதற்காக 1,100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, ஆண்டுக்கு 2 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.”

பொருளாதார அதிர்வுகள்

ஒன்றிய அமைச்சர் நிவாச வர்மா, பாஜக மாநிலத் தலைவர் மாதவ், சட்டமன்ற உறுப்பினர் ஜம்மலமடுகு   ஆதிநாராயண ரெட்டி உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் பங்கேற்ற இந்த நிகழ்வு, தென்னிந்திய இரும்புத் தொழில்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஏற்ெகனவே சேலம் உருக்காலை பல்வேறு நிர்வாகச் சிக்கல்களையும், இழப்புகளையும் சந்தித்து வரும் வேளையில், அதற்கு மிக அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில், பாஜாக மற்றும் தெலுங்கு தேசம் (TDP) கூட்டணியின் இத்தகைய மாபெரும் பில்லியன் டாலர் முதலீடு, தமிழ் நாட்டின் இரும்புத் தொழில் சந்தைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

ஆந்திராவின் இந்த வேகத் தொழில் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க தமிழ்நாடு அரசு தன் தரப்பு உத்திகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது சற்றே கசப்பான உண்மை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *