சென்னை, அக். 27– சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அரசை விமர்சித்து கருத்து களைத் தெரிவிக்கக் கூடாது என அச்சுறுத்தும் வகையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதற்குப் பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன. “இது என்ன மன்னராட்சியா?” என்று கேள்விகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்த சுற்றறிக்கையை உடனடி யாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக் கையும் பலமாக ஒலித்து வருகிறது.
சம வேலைக்கு சம ஊதியச் சட்டம், குறைந்த பட்ச ஊதியச் சட்டம் போன்ற அத்தியாவசிய சட்டங்களை அரசே முறையாக நடை முறைப்படுத்தாத சூழல் நிலவுகிறது. மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, காலியாக உள்ள பணி யிடங்களை உடனடியாக நிரப்புவது போன்ற பல்வேறு நியாயமான கோரிக்கைகளுக்காகச் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
தொழிலாளர்களும் ஊழியர்களும் தங் களது நியாயமான உரிமைகளையும் கோரிக்கைகளையும் ஜனநாயக முறையில் வெளிப்படுத்துவது அவர்களின் அடிப்படை உரிமையாகும்.
இத்தகைய சூழலில், அரசை விமர்சித்து கருத் துகளைப் பகிரக் கூடாது என்று ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டிருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமான செயலாகும் எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
எனவே, ஊழியர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் வெளிவந்துள்ள இந்தச் சுற்றறிக்கையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
