சீனா கட்டும் மிகப்பெரிய அணையால் இந்தியாவிற்கு வெள்ள அபாயம் சீன வல்லுநர்கள் எச்சரிக்கை

2 Min Read
- Advertisement -

பீஜிங், அக். 27- திபெத்தில், சீனா கட்டி வரும் மிகப்பெரிய அணையால் நம் நாட்டில் பிரம்மபுத்திரா நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக திபெத் உள்ளது. அங்கு யர்லுங் தசாங்போ என்ற நதி பாய்கிறது. திபெத்தில் உற்பத்தியாகும் அந்த நதி, நம் நாட்டின் அருணாச் சலப் பிரதேசத்தில் நுழை யும்போது, பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது.

தற்போது அந்த நதியின் குறுக்கே, 1,600 கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை சீனா கட்டி வருகிறது. திபெத்தின் தென்கிழக்கில் இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய எல் லைக்கு அருகில் உள்ள மோடோக் என்ற ஆழமான பள்ளத்தாக்கு பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அணை கட்டப்பட்டால், நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன அறிவியல் அகாடமி மற்றும் யுனான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த, 1325 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான, யர்லுங் தசாங்போ நதியின் நீர்வரத்து வரலாற்றை ஆய்வு செய்து, அவர்கள் இந்த எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அதாவது, உலகின் மிகப்பெரிய அணை என்பதால், அதில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அணையில் அபாய அளவைத் தாண்டி நீர் தேங்கி இருக்கும் போது, அதிக மழை பெய்தால் மதகுகள் திடீரென திறக்கப்படலாம். அப்படி ஒரே நேரத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர், கீழ்நோக்கி உள்ள இந்தியா மற்றும் வங்கதேச பகுதி மக்களை அதிரடியாக தாக்கும்.

உலக சராசரியை விட இரு மடங்கு வேகமாக திபெத் பீடபூமி வெப்பமடைந்து வருவதால் அங்குள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட மிக வேகமாக உருகி, அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்டதைப் போன்ற பெருவெள்ளம் ஏற்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த அணை கட்டப்படும் இடம் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் பகுதி என்பதாலும் அணைக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது சீன ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *