உத்தரகாண்டிலும் தேர்தல் ஆணையத்தின் ”திருவிளையாடல்!”

2 Min Read
- Advertisement -

டெக்ராடூன் அக் 27- உத்தரகாண்ட் மாநிலம் கிச்சா  சட்டமன்றத் தொகுதியில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 5,359 வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரி ‘படிவம் 7’  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது  சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த பூத் அளவிலான முகவர் ராஜேஷ் திவாரி என்பவர், கிச்சா தொகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வாக்காளர் களின் பெயர்களை நீக்குமாறு ‘படிவம் 7’ எதிர்ப்புகளைப் பதிவு செய்தார். இதில் பெரும்பாலானவை முஸ்லிம் வாக்காளர்களை இலக்கு வைத்து சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு மொத்தமாகத் தாக்கல் செய்யப்பட்ட படிவம் 7 மனுக்களை ஏற்க தொடக்கத்தில் உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதிகாரி மறுத்ததைத் தொடர்ந்து, பாஜக முகவர் ராஜேஷ் திவாரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பிறகு, தேர்தல் பதிவு அதிகாரி அந்த 5,359 படிவம் 7 மனுக்களையும் ஏற்றுக்கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதாக அவர் தெரி வித்துள்ளார்.

பாஜக முகவரின் எதிர்ப் பைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளிடமிருந்து அறிவிக்கை பெற்ற வாக்காளர்கள் பலர் தங்கள் ஆதார் கார்டு, குடும்பப் பதிவுச் சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு போன்ற உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், இறுதியாக வெளியான வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து கிச்சா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திலக் ராஜ் பேஹர் உட்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொய்யான தகவல்களின் அடிப் படையில் பாஜக திட்டமிட்டு வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயல்வதாகவும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை நடுநிலையாக இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர் பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவ டைந்துவிட்டதாகவும், பெறப் பட்ட மனுக்கள் மற்றும் ஆட்சேபனைகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டே முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கிச்சா கவுரவ் பாண்டே தெரிவித்துள்ளார். இந்நிகழ்வூ உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *