மாவட்ட நீதிபதிகள் ஓய்வு வயது 62 ஆக உயர்வு

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக்.27- மாவட்ட நீதிபதிகள் ஓய்வு வயதை 60-இல் இருந்து 62 ஆக உயர்த்த இதுவரை 14 மாநிலங்கள் சம்மதம் தெரிவித்து இருப்பதாக உச்சநீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் நீதிபதி கள் ஓய்வு வயது 65 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயது 62 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் ஓய்வு வயது 60 ஆகவும் உள்ளது.

தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மாவட்ட நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்த நடவடிக்கை எடுத்தன.

இதற்கிடையே, நாடு முழுவதும் மாவட்ட நீதி பதிகள் ஓய்வு வயதை ஒரே மாதிரியாக 62 ஆக உயர்த்தக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 4-ஆம் தேதி நடந்த விசாரணை யின் போது, தமிழ்நாடு, கருநாடகா, மராட்டியம் உள்பட 7 மாநிலங்கள் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த சம்மதித்து இருப்பதும், அங்கு கடந்த மார்ச் 31-ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு ஓய்வு பெற்ற மாவட்ட நீதி பதிகளை மீண்டும் பணியமர்த்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற மாநிலங்களும் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இநிலையில், உச்சநீதி மன்றத்தில் தலைமைநீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பச்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, 60 வயதில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அல்லது அண்மையில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள், தங்களை 62 வயது வரை பணியாற்ற அனுமதிக்கக்கோரி தனியாக மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் ரஞ்சித் குமார், அந்த மனுவை அவசர விசாரணைக்கு பட்டியலிடுமாறு வலி யுறுத்தினார். நாள் தோறும் நீதிபதிகள் ஓய்வு பெறுவதாகவும் அவர் கூறினார். ஆனால், அவசர விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அவர் கள் கூறியதாவது:-

இது உச்சநீதிமன்றத்திற் கும் மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சினை. மாவட்ட நீதிபதிகள் தனிப் பட்டமனுக்கள் தாக்கல் செய்வதை நாங்கள் ஏற்கவில்லை.

மாவட்ட நீதிபதிகள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த இதுவரை 14 மாநிலங்கள் சம்மதித்து இருப்பது திருப்தி அளிக் கிறது. மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *