வருமான வரித் தாக்கல் செய்ய புதிய வசதி இணையவழி வசதி தொடக்கம்!

புதுடில்லி, மே 17- சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் 2026-2027 மதிப்பீட்டு ஆண்டிற்கான (Assessment Year) வருமான வரித் தாக்கல் (ITR) செய்வதற்கான புதிய வசதியை வருமான வரித்துறை தற்போது தொடங்கியுள்ளது.

இதற்கான அய்டிஆர்-1 (ITR-1) மற்றும் அய்டிஆர்-4 (ITR-4) படிவங்களுக்கான எக்ஸல் (Excel) மற்றும் ஆன்லைன் படிவங்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2025-2026 நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான இந்த வரிப் படிவங்கள் கடந்த மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. தற்போது இதற்கான இணைய வழி நடைமுறைகள் முழுமையாகத் தொடங்கப்பட்டுள்ளதால், தகுதியுள்ள வரி செலுத்துவோர் தங்களுக்கான படிவங்களைப் பதிவிறக்கம் செய்து, விவரங்களைச் சரிபார்த்து உடனே வரித் தாக்கல் செய்யத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு விவரங்கள்

வரி செலுத்துவோர் தங்களின் படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய கடைசித் தேதிகள் வருமாறு:

அய்டிஆர்-1 படிவம் (தனிநபர்கள்): ஜூலை 31

அய்டிஆர்-4 படிவம்: ஆகஸ்ட் 31

அதிக எண்ணிக்கை யிலான சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் பயன்படுத்தும் வகையில் இந்த இரண்டு படிவங்களும் மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போது இணையவழி மற்றும் எக்ஸல் பயன்பாடுகள் அறிமுகமாகியுள்ளதால், வரி செலுத்துவோர் எவ்வித சிரமமும் இன்றி எளிதாக வரி தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *