காத்மாண்ட், அக். 26- நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பனிப்பாறை சரிவால் பேரழிவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 1,400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 5,000 பேரை காணவில்லை. பல வீடுகள், நீர்மின் நிலைய கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், அய்க்கிய நாடுகள் சபையின் இழப்பு மற்றும் சேதங்களுக்கான நிதியத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இழப்பிற்காக முதல் முறையாக நேபாளத்திற்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில், பருவநிலை மாற்றம் இத்தகைய தீவிர நிகழ்வுகளுக்கு காரணம் என்பதை அய்நா ஒப்புக்கொள்வது மட்டுமின்றி, வரலாற்று ரீதியாக அதிக மாசு ஏற்படுத்திய நாடுகள் (வளர்ந்த நாடுகள்), பாதிக்கப்படக்கூடிய வளரும் நாடுகளுக்கு உதவ இந்த நிதியத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற கொள்கையை உறுதிப்படுத்துகிறது. அய்க்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த நிதியத்தின் நோக்கம், பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வளரும் நாடுகளுக்கு உதவுவதாகும்.
