எஸ்.அய்.ஆர். குளறுபடிகளை வெளிக்கொண்டு வந்த பா.ஜ.க. பொதுச்செயலாளரால் பரபரப்பு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.08 இந்தியத் தேர்தல் ஆணையத்தின்வாக்காளர் பதிவு மற்றும் சரிபார்ப்பு நடை முறைகள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ்  எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தனக்கு அனுப்பப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு  அறிவிக்கை மற்றும் ‘படிவம் 6’  நடைமுறைகளில் உள்ள குளறுபடிகளை அவர் சமூக வலைதளம் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

தான் 2003-ஆம் ஆண்டு டில்லியில் வாக்காளராக இல்லை என்றும், ஃபார்ம்-6 படிவத்தைப் பயன்படுத்தி 2019-ஆம் ஆண்டில் தான் டில்லி வாக்காளர் பட்டி யலில் இணைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு காரணத்தை மட்டும் அடிப்படை யாகக் கொண்டு தனக்குச் சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு அறி விப்பு அனுப்பப்பட்டது எந்த வகை யிலும் முறையானதல்ல என்று அவர் வாதிட்டுள்ளார்.

ஒருவர் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் முன்பு வாக்காளராக இல்லாவிட்டாலும், அவர் இந்தியாவின் வேறு ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஏற்ெகனவே முறையாக வாக்காளராகப் பதிவு செய்தி ருக்கக்கூடும் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குத் குடிபெயரும் குடிமக்கள், முந்தைய மாநில வாக் காளர் பட்டியலிலிருந்து தங்களது விவரங்களை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கான நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இதன் மூலம் வலுப்பெற்றுள்ளது. இதற்கான முறையான மற்றும் தடையற்ற வழிமுறைகள் இல்லாதது தேர்தல் ஆணையத்தின் நிர்வாகச் சிக்கல்களையும், நடைமுறைக் குறைபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரி விக்கின்றனர். ஆளும் பாஜக கட்சியின் பொதுச்செயலாளரே தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமைத் தன்மை கோரி குரல் கொடுத்திருப்பது தற்போது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *