‘பயோ மைனிங்’ முறை மூலம் பழைய குப்பைகளை அகற்றி 118 ஏக்கர் நிலம் மீட்பு!

- Advertisement -

சென்னை, அக். 26- மாநக ராட்சி சார்பில் கொடுங்கையூர், பெருங்குடி, அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகங் களில் பயோ- மைனிங் முறையில் பழைய குப்பைகளை அகழ்ந்தெடுத்து, அந்த நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் 350 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இதில் பயோமைனிங் தொழில்நுட்பத்தின் மூலம் அகற்றப்பட வேண்டிய 66,52,506 டன் பழைய கழிவுகளில், இதுவரை சுமார் 47,85,993 டன் (72%) அகற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுமார் 22 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவடையும். அங்கு மொத்தமாக 200 ஏக்கர் நிலம் மீட்டெக்கப்படும்.

அத்துடன், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ள 12.13 லட்சம் டன் மரபுக் கழிவுகளைப் பயோமைனிங் முறையில் அகற்றுவதற்கான திட்டம் ரூ.116.89 கோடியில் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் 250 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இதில் முதல் கட்டமாக 29,28,398 கன மீட்டர் கழிவுகளும் (100%) முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 96 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

அங்கு நடைபெறும் 2ஆம் கட்ட பணியில் பயோமைனிங் தொழில்நுட்பம் மூலம் அகற்றப்பட வேண்டிய 5,50,000 டன் கழிவுகளில் இதுவரை சுமார் 1,08,073 டன் (20%) கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைடையும். அங்கு சுமார் 75 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்படும்.

அத்துடன், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ள 16.50 லட்சம் டன் கழிவுகளைப் பயோமைனிங் முறையில் அகற்ற ரூ.158.93 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகம் 5.5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. அங்கு முதற்கட்டமாக பயோமைனிங் தொழில்நுட்பத்தில் 1,07,811 கன மீட்டர் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.

2ஆம் கட்ட பணியில், 72,083 டன் மரபுக் கழிவுகளில், இதுவரை சுமார் 64,263 டன் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 5.5 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *