பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மீது சுமையை ஏற்றிவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்பதா? டி.ராஜா கடும் கண்டனம்!

சென்னை, மே 28 பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பொதுச்செயலாளர் டி.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களுக்கு பொருளாதார நெருக்கடி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொருளாதாரம் முழுவதும் கடுமையான சங்கிலித் தொடர் விளைவுகள் ஏற்படும். குறிப்பாக: போக்குவரத்துச் செலவுகள் மற்றும் பொதுப் போக்கு வரத்துக் கட்டணங்கள் உயரும். உணவுப் பொருட்களின் விலை மற்றும் விவசாயச் செலவுகள் அதிகரிக்கும். ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவும் கணிசமாக உயரும். தொழிலாளர்கள், விவ சாயிகள், ஊதியம் பெறும் பிரிவினர் மற்றும் ஏழை எளிய மக்கள் ஏற்ெகனவே கடுமையான பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகின்றனர். இத்தரு ணத்தில், மேலும் கடுமையான பணவீக்கத்தின் மூலம் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றவே ஓன்றியஅரசு தேர்ந்தெடுத்துள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கே முன்னுரிமை

எண்ணெய் விற்பனை நிறுவனங் களுக்கு ஏற்படும் இழப்புகளே இந்த விலை மாற்றங்களுக்குக் காரணம் என்று மோடி அரசு கூறும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. ஏனெனில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கணிசமான லாபத்தையே ஈட்டி வருகின்றன.  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டி வரும் நிலையில், அந்தப் பலன்கள் ஏன் நுகர்வோருக்கு (மக்களுக்கு) வழங்கப்படுவதில்லை?

“மக்களைவிட கார்ப்பரேட் நலன்களுக்கே மோடி அரசு முன்னுரிமை அளிக்கிறது. அரசின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் திரண்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர், டி.ராஜா கூறியுள்ளார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *