நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்! உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

- Advertisement -

புதுடில்லி, அக்.26– நீர்நிலைகள் பராமரிப்பு குறித்து பறவை ஆர்வலர் ஆனந்த் ஆர்யா மற்றும் வனசக்தி தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்
எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

“நீர்நிலைகள் மதிப்புமிக்கவை. குடிநீருக்கு ஆதாரமாக இருப்பவை. நீர்நிலைகளை தொடர்ந்து பாதுகாக்காமல் இருப்பதன் பின்விளைவுகளை இந்த நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. கண்டு கொள்ளாமல் இருக்காது.

இந்த நோக்கத்தை நிறைவேற்ற அனைத்து மாநிலங்களும் நீர்நிலைகளில் நேரடி களஆய்வு செய்ய வேண்டும். ஈரநிலங்களின் எல்லைகளை வரையறுக்க வேண்டும். இதை 4 மாதங்களில் செய்ய வேண்டும்.”

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *