வானிலை முறைகளை மாற்றியமைக்கும் ‘எல் நினோ’ அபாயம்: பெரு நாட்டில் அவசர நிலைப் பிரகடனம்

லிமா, ஜூலை 3- ‘எல் நினோ’ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை வழக்கத்தை விட அசாதாரணமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாகும். இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது.

பூமத்திய ரேகையை ஒட்டி கிழக்கிலிருந்து மேற்காக வீசும் வர்த்தகக் காற்று (Trade winds) வலுவிழக்கும் போது இந்நிலை உருவாகிறது. இதனால், தென் அமெரிக் காவின் பெரு (Peru) கடற்கரைப் பகுதியில் வழக்கமாக மேலே எழும்பும் குளிர்ந்த, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீர் தடைபடுகிறது.

‘எல் நினோ’

எல் நினோ உலகெங் கிலும் உள்ள வானிலை முறைகளை கடுமையாக மாற்றியமைக்கும். இது ஆஸ்திரேலியா, இந் தோனேசியா மற்றும் இந்தியாவின் சில பகுதி களில் வறட்சியை ஏற் படுத்தலாம். அதே சமயம், அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிக மழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெரு

இந்நிலையில் எல் நினோ மாற்றத்தால் அதி கனமழை பொழியும் ஆபத்து காரணமாக, பெரு நாட்டின் 40 சதவீத மாவட்டங்களில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 796 மாவட்டங்களில் இந்த உத்தரவு 60 நாட்கள் அமலில் இருக்கும் என்றும், உடனடி முன் னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும் என்றும் பெரு அரசு தெரி வித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *