ஓய்வூதிய விண்ணப்பங்கள் இனி இணைய வழியில்தான் அனுப்ப வேண்டும்!

- Advertisement -

சென்னை, அக். 26- அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களை நவம்பர் மாதம் முதல் இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் காகித விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கருவூலக் கணக்குத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருவூலக் கணக்குத் துறை இயக்குநர் தி.சாருசிறீ, துறைசார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னர் அனுப்பப்பட்ட காகித வடிவிலான சில ஓய்வூதிய விண்ணப்பங்கள், அவற்றுக்கான இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கு முன்பே தீர்க்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு முதன்மைக் கணக்காயர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஓய்வூதிய வழக்குகளைச் செயல்படுத்து வதில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஓய்வூதிய விண்ணப்பங்களை விரைவாகச் செயல்படுத்த நவம்பர் முதல் அனைத்து விண்ணப்பங்களும் இணையவழி ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்புநிதி அங்கீகார அமைப்பு மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் பிறகு பெறப்படும் காகித விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உடனே திருப்பி அனுப்பப்படும். திருத்திய ஓய்வூதிய விண்ணப்பங்களையும் இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான அனைத்து சான்றுகளும் உரிய முறையில் இணைக்கப்பட வேண்டும்.   ஓய்வூதியப் பலன்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்திட, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஊதிய அலுவலர்களுக்கும் இந்த அறிவுறுத்தல்களை தெரிவித்து, அவை கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *