பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் Emmchak Formulations Pvt. Ltd. நிறுவனத்தை பார்வையிட்டனர்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி, ஆக.18- திருச்சி Emmchak Formulations Pvt. Ltd. நிறுவனத்தை இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச.இராஜேஷ், இணை இயக்குநர் முனைவர் சி. விஜயலெட்சுமி, பேராசிரியர்கள் ஏஞ்சலினா ஜெனிஃபர் சாமி மற்றும் திரிஷ்யா நாகராஜ் ஆகியோர் 12.08.2026 அன்று பார்வையிட்டனர். இதில் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பல்வேறு நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் தயாரிப்பு முறைகளை மாணவர்கள் நேரடியாகப் பார்வையிட்டனர்.

மேலும் மருந்து உற்பத்தி முறைகள், அதன் தரத்தை உறுதி செய்தல், மற்றும் விற்பனை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மருந்து தயாரிப்புகள் குறித்து பாடத்திட்டத்தில் படிப்பதோடு நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தை பார்வையிட்டது தங்களது மருந்தியல் ஆய்வுத் திறனை வளர்த்ததாக மாணவர்கள் தெரிவித்ததோடு, இத்தகைய பெரும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, Emmchak Formulations Pvt. Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் கோபி மற்றும் சுப்ரமணியன் மற்றும் மருந்தியல் குழுவினருக்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *