ரத்த அழுத்த நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்!

- Advertisement -

“சராசரி மனிதனின் ரத்த அழுத்தத்தின் அளவு 120/80. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும். உடல் மெலிந்து இருப்பவர்களுக்கு சற்று குறைவாக இருக்கும். உடல் எடையைப் பொறுத்து, ரத்த அழுத்தம் மாறுபடும். பொதுவாக 130/90 மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம். ஆனால், தற்போது 125/85 மேல் இருந்தாலே உயர் ரத்த அழுத்த அறிகுறியாக கருதப்படுகிறது.

மரபு வழி ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, நாளமுள்ள சுரப்பிகள், உடல் பருமன் அதிகரிப்பு, மன அழுத்தம் உள்ளிட்டவை ரத்த அழுத்தம் வர முக்கியக் காரணங்கள் ஆகும். காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்த அழுத்த பரிசோதனைதான் மிகத் துல்லிய அளவை காட்டும்.

குறைவான விலையில் இப்போது ரத்த அழுத்தப் பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன. ஆகவே அனைவரின் வீட்டிலும் அவசியம் ரத்த அழுத்த பரிசோதனை கருவி மற்றும் உடல் எடை பார்க்கும் இயந்திரத்தையும் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். கடல் அலை போன்று காலையிலிருந்து மாலை வரை ரத்த அழுத்தம் மாறுபட்டு கொண்டே வரும்.

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் சுமா‌ர் 20 கிராம் உப்பு சேர்த்து கொள்கிறோம். இது தவறானதாகும். நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்புக்கும் ரத்த அழுத்தத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு.

மேலும், பேக்கரிப் பொருள்கள், சிப்ஸ், பிரெட் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் ஊறுகாய் போன்ற பொருள்களும் ரத்த அழுத்தத்திற்கு முக்கியக் காரணம். முடிந்த அளவு நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகைப் பழக்கம் போன்றவை ரத்த அழுத்தம் மாறுபாட்டிற்கான காரணங்கள் ஆகும்.

தமிழ்நாடு அரசு எடுத்துள்ள ஆய்வில் நகர்ப்புறங்களில் 33% பேருக்கும், கிராமப்புறங்களில் 25% பேருக்கும் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, 10இல் 3 பேருக்கு ரத்த அழுத்தமும், 5இல் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பது மிகவும் அவசியம். உணவில் உப்பின் அளவை குறைத்து பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும், உடற்பயிற்சி செய்யவேண்டும்.

ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும் நாள்தோறும் ரத்த அழுத்த மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவது, தீடீர் இதய அடைப்பு, வாத நோய், சிறுநீரக செயலிழப்பு வருவதற்கு முக்கியக் காரணம் ரத்த அழுத்தம் ஆகும். எனவே, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொண்டு உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *