2060ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி பயன்பாடு மூன்று மடங்கு அதிகரிக்கும்: அய்.நா. தகவல்

- Advertisement -

ஜெனீவா, அக். 25- பன்னாட்டு அணுசக்தி முகமை யின் (அய்ஏஇஏ) ஆண்டு அறிக்கையை அய்நா பொதுச் சபையில் சமர்ப்பித்த அதன் தலைவர் ரபேல் கிரோஸி பேசியதாவது: அணுசக்தியை தங்கள் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுவதற்கான முக்கிய காரணியாக பல நாடுகள் கருதுகின்றன. 2025இல் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் 400க்கும் மேற்பட்ட அணு உலைகள் உலகளாவிய மின்சார உற்பத்தியில் 10 சதவீதத்தையும், குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட மின்சார உற்பத்தியில் 25 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

தற்போது 60க்கும் மேற்பட்ட புதிய அணு உலைகள் கட்டுமானத்தில் உள்ளன. எதிர்கால அணுசக்தி திறன் குறித்த கணிப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளன. எனவே 2060ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி பயன்பாடு மும்மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கக் கூடும். மின்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தரவு மய்யங்கள் மற்றும் நம்பகமான, கார்பன் வெளியேற்றம் இல்லாத மின்சாரத்திற்கான தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவை ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
சீனாவுக்கு பயணம்

சியோல், அக். 25- வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வடகொரியாவை இணைக்கும் புதிய யாலு பாலமானது சுமார் பத்து ஆண்டு தாமதத்துக்கு பின் அண்மையில் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தென்கொரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓராண்டுக்கு பின் அவர் மேற்கொள்ளும் முதல் சீனப் பயணம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையே திறக்கப்பட்ட புதிய பாலம் வழியாக அதிபர் கிம் ஜாங் உன் சீனாவின் எல்லை நகரமான டான்டாங்கை வந்தடைந்தாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரியா மற்றும் சீனா இந்த பயணம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் மிரட்டல் நெருப்புடன் விளையாட வேண்டாம்

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

வாசிங்டன், அக். 25- அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாவிட்டால், ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதற்கு ஈரான் கடும் பதிலடி கொடுத்துள்ளது. ‘‘அமெரிக்கா நெருப்புடன் விளையாட வேண்டாம். எங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், வளைகுடா பகுதியில் உள்ள கடலடி தொலைத்தொடர்பு கேபிள்கள் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம்,” என ஈரானிய அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

இதன் மூலம் உலகளாவிய இணையச் சேவைகளை முடக்கி, தகவல் தொடர்பைத் துண்டிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *