கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு

- Advertisement -

கந்தர்வகோட்டை, அக். 25- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு 2026-2027 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது வழங்கப்பட்டது. காமராஜர் விருதினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அவர்களிடம் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவி யாளர் திருமேனி நாதன்,  பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யரின் கல்விப் பிரிவு உதவியா ளர் முத்துக்குமார், பட்டதாரி ஆசிரி யர்கள் மணிமேகலை ரகமதுல்லா, ஆசிரியர்கள் நிவின், செல்விஜாய், மழலையர் ஆசிரியர் கவுரி பள்ளி மேலாண்மை குழு தலைவி நித்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்பு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் வளர்ச்சிக்காக 100க்கும் மேற்பட்ட புரவலர்கள் இணைந்து உள்ளனர்.

பள்ளியில் சிறப்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவி களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக கராத்தே பயிற்சி வழங்கப் பட்டு வருகிறது.

கணினி கல்வியறிவை மேம் படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் டி என் ஸ்பார்க் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. அனைத்து பாடங்களும் நவீன வசதிகளுடன் கற்பிக்கப்படுகிறது.

சிறு சேமிப்பு

சிறுவயதிலேயே சிறு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில்  மாணவர்களுக்கு அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு கணக்கு தொடங்கப் பட்டு பணத்தை சேமித்து வரு கின்றனர்.இப்பணியினை கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை ஒருங்கிணைத்து வருகிறார்.

மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங் கள் நவீன ஸ்மார்ட் போர்டு வசதிகளோடு கற்பிக்கப்பட்டு வருகிறது. எல். கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை சிறப்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. எமது பள்ளியின் சிறப்புகளைப் பாராட்டி 202 5 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது. அக்கசிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது வழங்கி சிறப்பித்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கும் ,வட்டார கல்வி அலுவலர்கள் அவர்களுக்கும் மற்றும் அனைத்து உயர் அலுவலர்களுக்கும்  நன்றி தெரிவிக்கப்பட்டது.

காமராஜர் விருது பெற்றுள்ள அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு கல்வியாளர் மருத்துவர் சுவாமிநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், பள்ளியின் தூதுவர் கங்காதரன், முன்னாள் கல்வியாளர் பேராசிரியர் அமுதா, பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் தலைவி நித்யா யோகேஷ், துணைத் தலைவி  கல்வி நந்தினி  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் ஆசிரியர் பெருமக்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, கணித பட்டதாரி ஆசிரியை மணிமேகலை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா, இடைநிலை ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி, செல்விஜாய், ஜெம்ம ராகினி சகாய ஹில்டா, மழலையார் ஆசிரியர் கவுரி, கணிப்பொறி உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் பணி புரிந்து வருகின்றனர். காமராஜர் விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பள்ளி யின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *