தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா? சமூக நீதிக்கு எதிராகத் தவெக அரசு!   திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர்  சுப. வீரபாண்டியன்  கண்டனம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூலை 30 ‘நீட்’ தேர்வை எதிர்த்தும்,  EWS பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்னும் சமூக அநீதியை எதிர்த்தும்,  திராவிடர் கழகம், தமிழ்நாடு முழுவதும் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது!

பெரியார் – அம்பேத்கரைக் கொள்கைத் தலைவர்கள் என்று தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், நீட் தேர்வைத் தங்கள் கட்சி எதிர்ப்பதாகவும் கூறும், தவெகவின் ஆட்சியில் வெளிப்பட்டுள்ள இந்த சர்வாதிகாரப் போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது!

ஆசிரியர் தன் அறிக்கையில் கூறியுள்ளபடி,  சமூக நீதியில் கை வைப்பதும், சமூக விரோதச் செயலே ஆகும்!

கடந்த 17ஆம் தேதியே அனுமதி கேட்டுக் கடிதம் அனுப்பியிருந்தும்,  இன்று (30.7.2026) காலை சட்டென்று அப்பேரணிக்குத் தடை விதிப்பது எவ்விதத்திலும் ஜனநாயகம் ஆகாது!

தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா?

–இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *