ஒழுகினசேரி, அக். 24- கன்னியாகுமரி மாவட்ட கழகத் தலைவர் மா.மு சுப்பிரமணியம் எழுதிய திருக்குறள் ஓர் அறிவுக் கழகம் நூல் வெளியீட்டு விழா நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் நூலினை அறிமுகம் செய்ய கழக மாவட் டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் நூலினை பெற்றுக் கொண்டார். நூலின் பெருமைகள், சிறப்புகள், தனித்தன்மைகளை எடுத்துக்கூறி நூல் ஆசிரியரின் பெரியாரின் பெரும்பணியை பாராட்டி சிறப்புரையாற்றினார்.
காப்பாளர் ம.தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக மாவட்ட துணை தலைவர் ச.நல்ல பெருமாள், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, ச.ச.சத்தியா ராணி, மு.கும ரிச் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு நூலினை பெற்றுக்கொண்டு உரையாற்றினர். மாவட்ட கழக துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் கடவுள் மறுப்பு கூறி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன் நன்றி கூறினார்.
