மாணவர் தற்கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குடும்பத்தினர்

1 Min Read
- Advertisement -

கோவை, அக். 24-  கோவையில் பள்ளி மாணவர் தற்கொலை வழக்கில், தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, குடும்பத்தினர், உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நேற்று (23.10.2026) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்த மாணவர் அகிலன் கடந்த 21ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளியில் ஜாதிய கண்ணோட்டத்தி்ல் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் மற்றும் சக மாணவர்கள் இருவர் அணுகியதால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக, மாணவரின் தாய் கவுசல்யாதேவி அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் மற்றும் 2 மாணவர்கள் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டதாக முதலில் காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என்பதை அறிந்த அகிலனின் குடும்பத்தினர், உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் தொடர் புடைய அனைவரையும் கைது செய்ய வேண் டும், அதுவரை அகிலனின் உடலை உடற்கூராய்வு பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி ஆட்சியர் அலுவலகத்தில் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் துறையினரின் உறுதிமொழியை ஏற்று மாலையில் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, 16 வயதுடைய சக மாணவர்கள் இருவரை காவல் துறையினர் நேற்று (23.10.2026) கைது செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

புகாருக்குள்ளான தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகத்தினர் நேற்று  (23.10.2026) உத்தர விட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *