திராவிட மாடல் ஆட்சியின் சாதனை! எதிலும் முதல்நிலை மாநிலம் தமிழ்நாடு

2 Min Read

சென்னை, ஜூலை 9- தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முதலிடம் வகிக்கிறது. முக்கியமாக ஏற்றுமதியில் பல பிரிவுகளில் முதலிடம் வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இப்பொழுது வெளியான அறிக்கை ஒன்று தமிழ்நாட்டின் அசுர வளர்ச்சியை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

இந்திய தொழில்துறையின் அதிகார மய்யமாக தமிழ்நாடு தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. ஆட்சி மாற்றங்கள், கொள்கை மாற்றங்கள் நிலவினாலும் தமிழ்நாடு தொடர்ந்து ஆட்டோபைலட் முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

அந்த வகையில் 2025-2026 நிதியாண்டில் (FY 2025-2026) தமிழ்நாடு மட்டும் சுமார் 59.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவிலேயே நம்பர் 1 இடம் ஆகும்!

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 13.67 சதவீதம் என்ற அசாத்திய வளர்ச்சியாகும். இதன் மூலம், இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களின் ஏற்றுமதிப் பட்டியலில் மகாராட்டிரா, குஜராத் போன்ற பெரிய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

தொடர் முதலிடம்
– தமிழ்நாடு அசத்தல்

தமிழ்நாட்டின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குவது மின்னணு சாதனங்கள் மற்றும் ஜவுளித்துறை ஏற்றுமதி ஆகும். கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஆப்பிள், பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி மட்டுமே சுமார் 18 பில்லியன் டாலரை எட்டி சாதனை படைத்துள்ளது.

மற்றொரு முக்கிய தூணாக விளங்கும் ஜவுளித்துறையில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் 21.84 சதவீத பங்களிப்பை தமிழ்நாடு மட்டுமே வழங்குகிறது.

குறிப்பாக, இந்தியாவின் பின்ன லாடைத் தலைநகரமான திருப்பூர், கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.46,000 கோடி மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் திருப்பூரின் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குஜராத் இதில் கடுமையாக பின்னடைவை சந்தித்துவிட்டது.

ஆட்டோமொபைல் மற்றும்
பிற துறைகளின் பங்களிப்பு

மின்னணு மற்றும் ஜவுளி மட்டுமின்றி, ஆட்டோமொபைல் துறையிலும் தமிழ்நாடு இந்தியாவின் தலைநகரமாக திகழ்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதியில் 45 சதவீத பங்களிப்பை தமிழ்நாடு வழங்குகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என்ற பெருமையைத் தக்கவைத்துள்ளன. மேலும், பொறியியல் பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் ரசாயன ஏற்றுமதியிலும் மாநிலம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டின் இந்த இமாலய வெற்றிக்கு மாநில அரசின் தொழில்துறை கொள்கைகள் முக்கியக் காரணமாகும்.

கடந்த திமுக ஆட்சியில் இதற்காக, திருப்பூரில் பெண் தொழிலாளர்களின் வசதிக்காக ரூ.1,250 கோடி மதிப்பீட்டில் தோழி விடுதிகள் கட்டும் பணிகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோல், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமைத் தொழில்நுட்பங்களை நோக்கி திருப்பூரின் உற்பத்தி கட்டமைப்பு மாறி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *