அதிர்ச்சியூட்டும் தணிக்கை அறிக்கை, நீக்குவது – சேர்ப்பது குறித்த டில்லியில் இருந்து மட்டுமே இயக்கக் கூடிய மோசடியான மென்பொருள் கண்டுபிடிப்பு!

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 24– நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்  மூலம் பல கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த புதிய ஆய்வு அறிக்கை ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி கட்டுப்பாட்டில்
மாநில அதிகாரிகள்:

‘சர்ச்சாகிராம்’ என்ற தொழில்நுட்ப ஆய்வு அமைப்பு நடத்திய தணிக்கை ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:

கணக்குகளை முடக்கும் வசதி: மாநில அளவில் வாக்காளர் பட்டியலைத் திருத்துதல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், பிழையற்ற பட்டியலைத் தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் மாநில நோடல் அதிகாரிகளின் (SNO) கணக்குகளை டில்லியிலிருந்து முழுமையாக முடக்குவதற்கான பிரத்யேகப் பகுதி மற்றும் பொத்தான்கள் இசிஅய்நெட் மென்பொருளில் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்புப் படிவ விவரங்களைப் பார்க்கும் வசதியை மாநில வாரியாக ‘ஆன்’ அல்லது ‘ஆப்’ செய்ய முடியும். இதனால், குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள அதிகாரிகளால் இசிஅய்நெட் தளத்தை அணுக முடியாமலும், கணக்கெடுப்பு படிவங்களைப் பார்க்க முடியாமலும் போகும் அபாயம் உள்ளது.

இதற்கான முழுத் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளும் டில்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அய்.டி. பிரிவிடம் மட்டுமே உள்ளன. இது வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் மாநில அதிகாரிகளின் சுயாதீனமான கட்டுப்பாட்டைக் பெருமளவில் குறைக்கும் என அஞ்சப்படுகிறது. ஜனநாயக நாட்டில் அனைத்து வாக்காளர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை விதியை மீறும் வகையில், இசிஅய்நெட் மென்பொருளில் சில குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு மட்டும் ‘விஅய்பி’ குறிச்சொற்கள் வழங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. சிலருக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது என்ற கேள்வியை இந்த அறிக்கை எழுப்பியுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் அல்காரிதம்கள், சில குறிப்பிட்ட மாநிலங்களில் பாரபட்சமாகவும் சார்புநிலையுடனும் செயல்பட வாய்ப்புள்ளதா என்ற பலத்த சந்தேகத்தையும் இந்த ஆய்வுச் சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்காளர் பட்டியல் முறைகேடு புகார்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், இந்த தொழில்நுட்ப தணிக்கை அறிக்கை தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை குறித்தும், மாநில அதிகாரிகளின் உரிமை பறிப்பு குறித்தும் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *