உண்ணிக் காய்ச்சல் ஜனவரி மாதம் வரை பாதிப்பு தொடரலாம் காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்குச் செல்க! பொது சுகாதாரத்துறை இயக்குநர்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 21-  தமிழ்நாட்டில் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு வரும் ஜனவரி மாதம் வரை இருக்கும், காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், இதை மறுத்த சுகாதாரத்துறை ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்ற உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவித்தது. இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் உண்ணிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு காட்சிப் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட் டுள்ளார்.

அந்த காட்சிப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: உண்ணிக் காய்ச்சல் என்பது பாக்டீரியா கிருமியால் வரும் காய்ச்சல் ஆகும். ஆள் உயரத்துக்கு வளரும் புல், புதர்கள் மற்றும் வயல்வெளிகளில் வாழும் ஒரு வகை உண்ணி மற்றும் பூச்சி கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகிறது. முன்பு காடுகள் மற்றும் வயல்வெளிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த நோய் பரவி வந்தது.

ஆனால், தற்போது பருவநிலை மாற்றம் மற்றும் மக்களின் இடப்பெயர்வு காரணமாக அனைத்து இடங்களிலும் பரவலாக நோய் காணப்படுகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை இந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த காய்ச்சலை கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மற்ற காய்ச்சலை போன்று சாதாரணமாக உடல்வலி, பசியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்து வரை அணுக வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

அதே காட்சிப் பதிவில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொதுநல மருத்துவர் பி.வி.பாலமுருகன் கூறுகையில், “வயல்வெளிகள், புல்வெளிகளில் நடக்கும் போது, பேன்ட், ஷூ, முழு கை சட்டை அணிய வேண்டும். டெங்கு காய்ச்சல் போல், அதிக காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, வறட்டு இருமல் போன்றவை இருக்கும். குறிப்பாக, 4 மணிக்கு காய்ச்சல் இல்லாமல் இருந்தவருக்கு, 4:15 மணியளவில் அதிகளவில் காய்ச்சல் பாதிப்பு இருக்கும்.

உண்ணிக் காய்ச்சலை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம். உரிய சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு, இதய பாதிப்பு ஏற்படும்.

அவ்வாறு வந்தாலும் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், இணை நோயா ளிகள் தாமதமாக வரும்போது உயிரிழப்பு ஏற்படும். இந்த நோய்க் கான பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *