பண்ருட்டி, அக்.24 சபரிமலை அய்யப்பன் கோயிலில், தமிழ்நாடு அரசின் இலவச வேட்டியில் தயாரிக்கப்பட்ட இருமுடி, பை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, அங்குசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வர் நவநீதகிருஷ்ணன், (வயது 35). கணினி மய்ய உரியமையாளர். இவர், தன் நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், மணிகண்டன், ரமேஷ் ஆகியோருடன் கடந்த, 21 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்றார்.
பம்பையில் கேரள அரசின் தேவஸ்வம் போர்டு சார்பில் நடத்தப்படும் கடையில் இருமுடி கட்டுவதற்கான பைகளை நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் வாங்கினர். அந்த பை, தமிழ்நாடு அரசு பொங்கல் விழா வின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் வேட்டியில் தயா ரிக்கப்பட்டிருந்தது.
அந்த வேட்டியில், தமிழ்நாடு அரசின் முத்திரையுடன் பொங்கல் 2025 ஆம் ஆண்டு, வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பதிவு எண், ரகம், தொகுப்பு எண், முகமை தமிழ்நாடு பஞ்சாலைக்கழகம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு இருமுடி பை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பையில் இரு தேங்காய், சந்தன பாக்கெட் 1, விபூதி பாக்கெட் 1, ஒரு கைப்பிடி பச்ச ரிசி ஆகியவை இருந்தன. தமிழ்நாடு அரசின் முத்திரையுடன் கூடிய இந்த வேட்டி எப்படி வந்தது என்பது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் பக்தர்கள் கேட்டதற்கு, அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.
தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கிய வேட்டிகள் எப்படி கேரளம், அரசின் கடைக்கு விற்பனைக்கு வந்தன? இலவச வேட்டிகள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என, சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வரு கின்றனர்.
