இராவணனை எரித்தால் மனம் புண்படாதா? – கருஞ்சட்டை –

2 Min Read
- Advertisement -

இராமன் படத்தை எரித்தால், பிள்ளையார் சிலையை உடைத்தால் ‘அய்யயோ! பக்தர்களின் மனதைப் புண்படுத்துகிறார்களே’ என்று புலம்புகிறார்கள் – ஏன், நீதிமன்றமும் செல்கிறார்கள்.

எரிக்கக்கூட, போகவேண்டாம் – விமர்சனம் செய்தாலே ‘விட்டேனா பார்!’ என்று எகிறிக் குதிக்கி றார்கள்!

இவ்வளவுக்கும் இந்து மதப் புராணங்களிலும், இதிகாசங்களிலும் உள்ளதை, உள்ளபடியே எடுத்துக்காட்டினால், உடல் வியர்க்கிறது – குருதி கொதிக்கிறது ஒரு கூட்டத்திற்கு!

அவர்களை நோக்கி ஒரு முக்கிய கேள்வி இருக்கிறது – விஜயதசமியன்று ஆண்டுதோறும் இந்தியாவின் தலைநகரமான டில்லியில், ராம் லீலா மைதானத்தில் இராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவப் பொம்மைகளை எரிக்கிறார்களே, அது மட்டும் சரியா?

இராவணனைத் தங்கள் குலதெய்வமாக, இந்தி யாவின் பல பகுதிகளிலும் வழிபடுகிறார்களே, அது தெரியுமா? ‘இராவணேஸ்வரன்’ என்று கூறிப் பக்தி செலுத்துகிறார்களே – ஆதாரம் வேண்டுமா? கண்களைத் துடைத்துவிட்டு, திறந்த மனதோடு படியுங்கள்!

இதோ அந்தப் பட்டியல்!

மண்ட்சவுர் (மத்தியப் பிரதேசம்): இங்கு வாழும் ‘நாம்தேவ்’ (Namdev) சமூக மக்கள் ராவணனின் மனைவி மண்டோதரியைத் தங்கள் ஊர் மகளாகவும், ராவணனைத் தங்கள் மாப்பிள்ளையாகவும் (மருமகனாகவும்) கருதுகின்றனர். இதனால் அவரைத் தங்கள் குலத்தைச் சார்ந்தவராகக் கருதி சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

ஜோத்பூர் (ராஜஸ்தான்): இங்குள்ள ‘சிறீமாலி கோதா பிராமணர்கள்’ ராவணனின் வழித்தோன்றல்க ளாகத் தங்களைக் கருதுகின்றனர். இங்கு ராவணனுக்குத் தனிக்கோவில் உள்ளது; விஜயதசமி நாளில் உருவ பொம்மையை எரிக்காமல் அவருக்குத் திதி/சடங்குகள் செய்வார்கள்.

ராவண்கிராம் (விதிஷா மாவட்டம், மத்தியப் பிரதேசம்): இந்த கிராம மக்கள் ராவணனைத் தங்கள் கிராமத்தின் முக்கியக் கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர். எந்த ஒரு சுப காரியத்துக்கும் முன் ராவணனுக்குப் பூஜை செய்வதும், குழந்தை பாக்கி யத்திற்காக வழிபடுவதும் இவர்களின் வழக்கமாகும்.

பிஸ்ரக் (உத்தரப் பிரதேசம்): இக்கிராமத்தை ராவணனின் பிறந்த இடமாகக் கருதுகிறார்கள். இங்கி ருப்பவர்கள் ராவணனைத் தங்கள் முன்னோராகவும், சிவபெருமானின் சிறந்த பக்தராகவும் கருதி மரியாதை செலுத்துகின்றனர்.

காக்கிநாடா (ஆந்திரப் பிரதேசம்) & பைஜ்நாத் (இமாச்சலப் பிரதேசம்): இப்பகுதிகளில் ராவணனின் தீவிர சிவபக்தியைப் போற்றும் வகையில் அவருக்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இப்பகுதிகளில் தசரா பண்டிகையின் போது ராவணனின் உருவ பொம்மையை எரிப்பதற்குப் பதிலாக, அவரை ஒரு சிறந்த அறிஞராகவும், சிவபக்த ராகவும் கருதி வழிபடுகின்றனர்.

இப்பொழுது சொல்லுங்கள், இராவணனை வழி படுகிறார்கள், இராவணனுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள்.

அத்தகைய இராவணனை ஆண்டுதோறும் டில்லியில் எரிக்கிறார்களே, இராவணனைத் தங்கள் கடவுளாகக் கருதி வாழையடி வாழையாக வழிபட்டு வருகிறார்களே, அவர்களின் மனம் புண்படாதா?

மனம் புண்படுகிறது என்பது ஒருவழிப் பாதையா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *