குரல்வழி உள்ளீடுகளைப் பார்வை மாற்றுத் திறனாளிகள் வாசிக்க ஏதுவாக அச்சிடும் இயந்திரம் ஆந்திர மாணவிக்கு அங்கீகாரம்

1 Min Read
- Advertisement -

அய்தராபாத், அக். 23- ஆந்திராவைச் சேர்ந்த லிங்கம்பள்ளி ஹிமஜா என்ற 20 வயது மாணவி உலகின் மிகச்சிறந்த பொறியியல் கண்டுபிடிப்புகளுக்காக அளிக்கப் படும் ஜேம்ஸ் டைசன் விருதுக்கு தகுதி பெற்றுள்ளார். பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்கும் பிரெய்லி எழுத்து முறையில் குரல்வழி உள்ளீடுகளை கொண்டு அச்சிடும் அச்சுப்பொறியை வடிவமைத்ததற்காக இத்தகைய அங்கிகாரம் கிடைத்துள்ளது.

ருத்ரா என்று பெயரிடப்பட் டுள்ள இந்த அச்சுப்பொறி பிரெய்லி அச்சுகளை பார்வை மாற்றுத் திறனாளிகளே யாருடைய உதவிகளும் இன்றி அச்சிட்டுக்கொள்ளும் வசதியை அளித்துள்ளது. இது பயன்பாட்டில் உள்ள பிற பிரெய்லி அச்சுப்பொறிகளை விட மேம்பட்ட அம்சமாகும்.

இந்த அச்சுபொறியை உருவாக்கும் எண்ணம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை பார்வையிட சென்ற போது உருவானது என்கிறார் ஹிமஜா.

ஆரம்பத்தில் தட்டச்சு முறையி லேயே உருவாக்க திட்டமிட்டவர் ஒரு மாணவரின் கேள்விக்கு பின் குரல்வழி உள்ளீடு செய்யும்படியாக வடிவமைத்ததாக கூறுகிறார்

செயற்கை நுண்ணறிவு மற்றும் அமைப்பு ஒருங்கிணைப்பு சார்ந்த பணிகளை ரோகித் பாலாஜி ஜொனலா என்ற மாணவருடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

இந்த விருதுக்கு தகுதி பெற்றுள்ள 20 கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கான முடிவுகள் வரும் நவம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான பரிசுத்தொகை 30000 பவுண்டுகள்(தோராயமாக 38 லட்சம் இந்திய ரூபாய்) அளிக்கப்பட உள்ளது.

இது பார்வை மாற்றுத்திறனாளி கள் கற்றல் கற்பித்தலில் சார்ந்திருத் தலைக் குறைத்து எளிமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அளவிலான போட்டியில் தேர்வாகி இறுதிச் சுற்றுக்கு நுழைந்ததால் 6 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் டைசன் விருது

இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர் ஆவார். அதோடு கண்டுபிடிப்பாளரும் கூட.

புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு 2007 முதல் இந்த விருது அளிக்கப்பட்டு வருகிறது.

இறுதி வெற்றியாளர்களை ஜேம்ஸ் டைசன் தகுதிபெற்ற 20 போட்டியாளர்களுள் தேர்வு செய்வார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *