மாநில அளவிலான கராத்தே போட்டியில் முத்திரை பதித்த திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி

1 Min Read
- Advertisement -

திருச்சி. அக். 23-  ஷோபுகாய் ஷிடோ-சு கராத்தே ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா Shobukai Shito-Ryu Karate Federation – India) அமைப்பு மற்றும் தமிழ்நாடு கராத்தே விளையாட்டுக் கூட்டமைப்பு  சார்பில், கடந்த அக்டோபர் 18, 2026 அன்று,  முதலாவது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் நடைபெற்றது. இதில்,

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவி எஸ். விஷ்ணு பிரியா,   கருப்புப் பட்டை, கட்டா  பிரிவில் கலந்துகொண்டு, தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கும் திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி விஷ்ணு பிரியாவை பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்ட அனைவரும் மனதாரப் பாராட்டித் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *