ஒரு முன்னணி பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 321 அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 321
பணி: நிதி (CA & CMA), காலியிடங்கள்: 20
பணி: சட்டம், காலியிடங்கள்: 20
பணி: தகவல் தொழில்நுட்பம், காலியிடங்கள்: 10
பணி: வாகனப் பொறியாளர் (Automobile Engineers), காலியிடங்கள்: 20
பணி: ரிஸ்க் இன்ஜினியர்ஸ் (Risk Engineers), காலியிடங்கள்: 28
பணி: கம்பெனி செக்ரட்டரி, காலியிடங்கள்: 2
பணி: விவசாயம், காலியிடங்கள்: 20
சிறப்பு நிபுணர் பணி
பணி: தகவல் தொழில்நுட்பம், காலியிடங்கள்: 1
பணி: Generalist, காலியிடங்கள்: 200
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், இளங்கலை சட்டம், அய்.சி.ஏ.அய். போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 1.10.2026 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் தேர்வு மய்யம்: சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், விருதுநகர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.250+ஜிஎஸ்டி, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.1000 + ஜிஎஸ்டி
விண்ணப்பிக்கும் முறை: https://nationalinsurance.nic.co.in/recruitment என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2026
