குலசேகரன்பட்டினத்தில் ஆந்திர பெண் பக்தரின் 9 பவுன் நகைகள், மடிக்கணினி திருட்டு!

1 Min Read
- Advertisement -

குலசேகரன்பட்டினம், அக்.21- ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், டென்நேரு காங்கிபாடு பகுதியைச் சேர்ந்த ரவிசந்த் மகள் சாய் பிரியங்கா (வயது 26). இவர் பெங்களூருவில் உள்ள அய்.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் குலசை தசரா விழாவிற்கென முத்தாரம்மன் கோயிலுக்குக் கடந்த 16ஆம் தேதி காரில் புறப்பட்டு வந்தார்.

கோயில் பகுதியில் தசரா குழுக்களின் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட அவர், 18.10.2026 அன்று இரவு 9 மணியளவில் மீண்டும் காருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் காருக்குள் வைத்திருந்த 2 தங்கச் சங்கிலிகள், 2 ஜோடி வளையல்கள், 1 ஜோடி கம்மல் என மொத்தமாக 9 பவுன் நகைகள் மற்றும் மடிக்கணினி திருடப்பட்டு இருந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சமாகும்.

அவர் காரை நிறுத்திவிட்டுச் சென்றதை நோட்டமிட்டு சில நபர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் சோனியா வழக்குப்பதிவு செய்து காரை உடைத்து நகைகள், திருடிச்சென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *