இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்: கிரண் ரிஜிஜு. ஏற்கெனவே நடைபெற்ற ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாமல், அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தல்.
தி இந்து:
* மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விதிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு சிபிஅய்(எம்) புகார்: தனியார் நபர்களைக் கணக்கெடுப்பாளர்களாக நியமிக்க அனுமதிக்கும் விதி திருத்தங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இது தன்னிச்சையான, அரசியல் உள்நோக்கம் கொண்ட நியமனங்களுக்கு வழிவகுக்கும் என்றும் குடியரசுத் தலைவருக்கு கடிதம்:
தி டெலிகிராப்:
* எஸ்.அய்.ஆர், தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியிடம் கார்கே பேசத் திட்டம். வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள், தொகுதி மறுவரையறையின் விளைவுகள் மற்றும் மகளிர் இட ஒதுக்கீட்டை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என்பது குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என பேட்டி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “கிராமப்புறப் பாதுகாப்பு வலை மீது தாக்குதல்” — மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட விபி.ஜி.ராம் திட்டம், திட்டமிட்ட என ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம். உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் போலி வருகைப் பதிவுகள், போலிச் செயலி மோசடிகள் மூலம் தொழிலாளர்களின் ஊதியம் கையாடல் செய்யப்படுவதாகவும், இது ஊழல் மட்டுமல்ல; தொழிலாளர்களின் ஊதியத்தை முறையாகக் கொள்ளையடிக்கும் செயலாகும் என்றும் கண்டனம்.
– குடந்தை கருணா
